கஜா புயலால் சேதமான அரசு கூட்டுறவு
கயிறு தொழிற்சாலை மூடிக்கிடக்கும் அவலம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே,
அரசு கூட்டுறவு கயிறு தொழிற் சாலை கடந்த ஓராண்டுக்கும் மேல் மூடிக்
கிடக்கிறது. இதனால் நூற் றுக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். இதனை
உடனடி யாக சீரமைத்து மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி அருகே
உள்ளகுருவிக் கரம்பை கிராமத்தில், அரசுக்கு சொந்தமான கயிறு மற்றும் கயிறு
உற்பத்தி கூட்டுறவு சங்கம் உள்ளது. இதில் கயிறு மற்றும் அதனைச் சார்ந்த
உபதொழில்களில் நேரடி யாக 50 பேரும், மறைமுகமாக 50 பேரும் வேலை செய்து
வந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி வீசிய கஜா
புயலில் குருவிக்கரம்பை கயிறு உற் பத்தி கூட்டுறவு சங்கத்தின், மேற் கூரை
மற்றும் கட்டடம் சேதம டைந்தது. மின் இணைப்பும் பாதிக் கப்பட்டது. அதன்
பிறகு கடந்த 14 மாத காலமாக செயல்படாமல் உள்ளது.
மேற்கூரை சேதமடைந்த நிலை யில் ரூ.30
லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், தளவாடப் பொருட் கள் மழையிலும்,
வெயிலிலும், கிடந்து வீணாகிவருகிறது. மேலும் தொழிற்சாலை கதவுகள் உடைந்து
கிடப்பதால் இயந்திரங்கள், தள வாடப் பொருட்களுக்கு பாது காப்பு இல்லாத நிலை
உள்ளது.
கூட்டுறவு சங்கத்தின் தலைவர், முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர் நாடாகாடு எஸ்.நீலகண் டன் கூறியதாவது:
“இதுகுறித்து மாவட்ட தொழில் மய்யத்திற்கு
தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரி கள் வந்து பார்வையிட்டு, ரூ.5 லட்சம்
செலவாகும் என திட்ட அறிக்கை தயார் செய்து சென்று உள்ளனர். ஊரக தொழிற்துறை
அலுவலர்களுக்கும் தகவல் அளித் துள்ளோம். விரைவில் பணிகள் தொடங்கும் என
காத்திருக்கிறோம். தொழிலாளர்கள் வேலை இல்லா மல் உள்ளது கவலையளிக்கிறது”
என்றார்.
இதுகுறித்து மாவட்ட ஆட் சியர், உடனடியாக
நடவடிக்கை எடுத்து கூட்டுறவு கயிறு தொழிற் சாலையை உடனடியாக திறக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
No comments:
Post a Comment