Saturday, January 11, 2020

சுற்றுச்சூழல் மாசுபடாத போகி பொங்கல் திருநாள்

கார்காலம் முடி வடைவதை குறிக்கும் பஞ்சாபியர் களின் முக்கிய விழாவான அறுவடை திருநாளாக சுற்றுச்சூழல் மாசுபடாத போகி பொங்கல் விழாவாக சென்னை பஞ்சாப் அசோசியேஷன் சார்பாக  வெகு சிறப்பாக கொண் டாடப்பட்டது. சென்னையை சேர்ந்த 1000 த்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கு பெற்ற இவ்விழா சென்னை அண்ணா ஆதர்ஷ் கல்லூரி மைதானத்தில் கொண்டா டப்பட்டது.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ மாலை வேளையில் தொடங்கிய இத்திருவிழாவில் செயலாளர் முன் னின்று கூடியிருந்த மக்கள் அனை வரும் பாடல்களுக்கும் இசைக்கும் நடன மாடினர்.
பஞ்சாப் மக்களின் முக்கிய இசை கருவியான "டோல்" முழங்க "கித்தா" மற்றும் "பாங்க்ரா" நடனமாடி அனைவருக்கும் பொங்கல் இனிப்பு கள் வழங்கி மகிழ்ச்சியுடன் கொண் டாடினர்.
இத்திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பஞ்சாப் அசோசியேஷன் நிர்வாகிகள் மற் றும் அதன் உறுப்பினர்கள் புத் தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
சென்னையில் வாழும் பஞ்சாபி மக்கள், அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை பேணி காப்பதிலும், அவர்களின் பாரம் பரியத்தை தொடர்ந்து கொண்டாடி வருவதிலும் தலைசிறந்தவர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...