இதையடுத்து, உதவி பொறி யாளர் பதவியில்,
எலக்ட்ரிகல் பிரிவில், 400; மெக்கானிக்கல் பிரிவில், 125; சிவில் பிரிவில்,
75 என, 400 நபர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு அறிவிப்பை, மின் வாரியம்
நேற்று வெளியிட்டுள்ளது.
மேலும், கணக்கீட்டாளர் பதவியில், 1,300;
இளநிலை உதவியாளர் கணக்கு பதவியில், 500 ஊழியர்களை தேர்வு செய்வதற்கான
அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.அதில், உதவி பொறியாளர் பத விக்கு,
பொறியியல் பட்டமும்; இளநிலை உதவியாளர் கணக்கு பதவிக்கு, ஏதேனும் ஒரு
இளங்கலை பட்டமும்; கணக்கீட்டாளர் பதவிக்கு, பி.காம்., பாடமும்
முடித்திருக்க வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிக் கும் தேதி, கடைசி
நாள் உள்ளிட்ட அறிவிப்பாணை, மின் வாரிய இணையதளத்தில் உள்ளது. மூன்று ஆண்டு
களாக, மின் வாரியம், எழுத்து தேர்வு மட்டும் நடத்தி, அதில், அதிக மதிப்பெண்
எடுப்பவர் களுக்கு, தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு அடிப்படையில், வேலை
வழங்கியது.
தற்போது, முதல் முறை யாக, எழுத்து தேர்வை,
கணினி வாயிலாக நடத்த உள்ளது. இதனால், முறைகேடு தடுக்கப் படும்; தேர்வு
முடிவும் விரை வில் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment