ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம்
கோமெய்னி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன், உக்ரைன்
தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக விமானம் புறப்பட்ட சில
நிமிடங் களிலேயே விபத்துக்குள்ளானது.
இதில் விமானத்தில் இருந்த 176 பேரும்
சம்பவ இடத்திலேயே பலியாகி னர். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம்
அதிகரித்துள்ள சூழலில் இந்த விபத்து நடந்துள்ளது. எனவே விமானம் சுட்டு
வீழ்த்தப் பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந் துள்ளன.
உலகளாவிய விமான போக்குவரத் துத்துறை
விதிகளின் கீழ், இந்த விபத்து குறித்து விசாரணையை வழிநடத்த ஈரா னுக்கு
உரிமை உண்டு. அந்த அடிப் படையில் தனி விசாரணை குழுவை அமைத்து ஈரான் இந்த
விபத்து குறித்து விசாரித்து வருகிறது.
விபத்துக்குள்ளான விமானத்திலி ருந்து
மீட்கப்பட்ட கருப்புப் பெட்டியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட் டோம் என
ஈரான் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடித்தக்கக்து.
No comments:
Post a Comment