Wednesday, January 8, 2020

டிஜிட்டல்' மின் கட்டண வசூல் ரூ.1,500 கோடியை தாண்டியது

மின் வாரியத்தின், 'டிஜிட்டல்' முறையிலான, மின் கட்டண வசூல், 1,500 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.தமிழகத்தில், வீடுகள் உட்பட, 2.99 கோடி மின் இணைப்புகள் உள்ளன. அதில், வீடுகளுக்கு, 100 யூனிட் இலவச மின்சாரம்; விவசாயம், குடிசைகளுக்கு இலவசம் தவிர்த்து, 1.90 கோடி இணைப்புகளுக்கு, மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மொபைல், 'ஆப்'அதன்படி, மின் கட்டணத்தை, ரொக்க பணம், வங்கி வரைவோலை மற்றும் காசோலை வாயிலாக, மின் கட்டண மய்யம், அஞ்சல் நிலையம், சில வங்கிகளில் செலுத்தலாம்.மேலும், வாரிய இணையதளம் மற்றும் மொபைல், 'ஆப்' எனப்படும் செயலி; அரசு, 'இ - சேவை' மய்யங்கள், 'பாரத் பில் பேமென்ட், டெபிட், கிரெடிட் கார்டுகள்' வாயிலாக, மின்னணு முறையிலும் செலுத்தலாம்.ரொக்க பணமாக செலுத்தும்போது, பணம் திருடு போவது, தொலைப்பது, சில்லரை தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன.இதனால், டிஜிட்டல் முறையிலான, மின் கட்டண வசூல் தொடர்பாக, வாரியம் சார்பில், மின் நுகர்வோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதையடுத்து, அந்த முறையிலான வசூல் அதிகரித்து வருகிறது.அதிகரிப்பு குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் கட்டண வசூல் வாயிலாக, மாதம், 3,000 கோடி முதல், 3,100 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. அதில், 2019 ஏப்ரல் நிலவரப்படி, மாதம், 28 லட்சம் பேர், 'டிஜிட்டல்' முறையில், 1,300 கோடி ரூபாய் வரை செலுத்தி உள்ளனர். தற்போது, மாதம், 33 லட்சம் பேர், 1,500 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தும் நிலையில், அந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...