Tuesday, December 17, 2019

உதவுவதால் வாழ்க்கை உயர்வடையும்

 மதிய வேளை. கொட்டித் தீர்த்த கனமழைக்கு நடுவே சொட்டச் சொட்ட நனைந்தவாறு ஆதரவற்றவர்கள், முதியவர்கள், மாநகரில் சுற்றித் திரியும் யாசகர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கிக் கொண்டிருந்தார் பெண் ஒருவர்.
கோவை காந்திபுரம் புதிய மேம்பாலத்தின் அடியிலும் மாநகரின் சில பகுதிகளிலும் இருக்கும் ஆதரவற்றோருக்கு அவர் அன் றாடம் உணவளிப்பதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அந்தப் பெண் தினமும் தங்களுக்கு மதிய உணவளிப்பதுடன், கிழிந்த கந்தலான ஆடைகளை அணிந்திருப்பவர் களுக்குச் சேலை, லுங்கி, சட்டை போன்ற வற்றை வாங்கித் தருவதாகவும் ஆதரவற்றோர் சிலர் சொன்னார்கள்.
அவர்கள் சொல்லிக் கொண்டிருக் கும்போதே கையில் பையுடன் அந்தப் பெண் வந்தார். நாம் பேச முயன்றபோது சில நிமிடங்களில் வந்துவிடுவதாகச் சொல்லி விட்டுச் சென்றார். இன்னைக்குக் கொஞ்சம் தாமதமாகிடுச்சு. அவங்க பசியோடு காத்தி ருப்பாங்க. அதனாலதான், காத்திருக்கச் சொன்னேன் என்று தன்மையுடன் சொன்னவரின் பெயர் வெண்ணிலா.
வெண்ணிலாவின் பூர்விகம் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை. கோவைக்குக் குடிபெயர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தற்போது கோவை கணபதி பகுதியில் குடும்பத்தினருடன் இருக் கிறார். கேவையில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலைசெய்துவருகிறார்.
சிறு வயது முதலே மற்றவர்களின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் குணம் கொண்ட வெண்ணிலா தன்னால் முடிந்த அளவுக்குப் பிறருக்கு உதவுவது வழக்கம். கோவைக்கு வந்த பிறகு இங்குள்ள தன்னார் வலர்களுடன் இணைந்து, சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஆதரவற்ற வர்கள், முதியவர்கள், யாசகர்கள்னு நிறையப் பேர் பட்டினியால் வாடுவதைப் பார்க்க வருத்தமாக இருந்தது. அவர்களுக்கு ஒரு வேளையாவது உணவளிக்க நினைத்தேன். வீட்டிலேயே சமைத்து, பொட்டலம் கட்டிக் கொண்டுவந்து கொடுக்கத் தொடங்கினேன் என்று சொல்லும் வெண்ணிலா இதைச் சில ஆண்டுகளாகச் செய்துவருகிறார். உண வோடு அவ்வப்போது ஆடைகளையும் தரு கிறார்.  விழா நாட்களில் பிரியாணி, இனிப்பு, காரம் போன்றவற்றைத் தருகிறார்.
மேலும் இவர் 'Beggerless City in India' என்ற பெயரில் முகநூல் குழு ஒன்றைத் தொடங்கி, அதன்மூலம் முகநூல் நண்பர்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்திவருகிறார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...