Tuesday, December 31, 2019

பா.ஜ.க.வுக்கு பயந்துகொண்டு பெரியாரை மறந்த அ.தி.மு.க.! அம்பலப்படுத்துகிறது "டி.டி.நெக்ஸ்ட்"

ஒருபோதும் மறவாமல் ஆண்டுதோறும் ஜெய லலிதா மரியாதை செலுத்தி வந்த தந்தை பெரியாரை, ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமை யிலான அ.தி.மு.க., பா.ஜ.க. வுக்குப் பயந்து கொண்டு அவரது நினைவு நாளில் மரியாதை  செலுத் தாமல் புறக்கணித்து விட்டது என்று “டி.டி நெக்ஸ்ட்” ஆங்கில நாளேடு அம்பலப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ‘டி.டி.நெக்ஸ்ட்’ ஆங்கில நாளேட்டின் 27.12.2019 இதழில் ‘செய்தியாளரின் நாட்குறிப்பு’ (ரிப்போர்ட்டர்ஸ் டைரி) என்ற தலைப்பில் அதன் செய்தியாளர் சென்னை - யாழினியன் எழுதியுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளும் அ.தி.மு.க. தங்கள் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி அவருக்கு மரியாதை  செலுத் தியபோது, அதே நாளில் இறந்த தங்கள் இயக்கத்தின் நிறுவனரான பெரியாரை ஒதுக்கிவிட்டது.
தந்தை பெரியார், திராவிட இயக்கத்தின் முதுகெலும்பாக இருந் தவர். முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் அவருடைய கொள்கை களைப் பின்பற்றினார். தனது கட்சியின் பெயரில் அண் ணாவைக் கொண்டுள்ள அ.தி.மு.க. தங்கள் அரசியல் குருவான பெரி யாரை மறந்துவிட்டது.
டிசம்பர் 24ஆம் தேதி முதல மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்பட அக் கட்சியின் தலைவர்கள் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை  செலுத்தினர். ஆனால் பெரியார் அவர்களுக்கு அவ்வாறு மரியாதை  செலுத்தவில்லை.
இது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடைமுறையிலிருந்து விலகிச் சென்ற செயலாகும். அவர் (ஜெயலலிதா) ஒருபோதும் தந்தை பெரியார் அவர்களுக்கு பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்களில் அவருக்கு மரியாதை  செலுத்த மறந்ததில்லை. அ.தி.மு.க. பெரி யாருக்கு மரியாதை  செலுத்தாதது; அ.தி.மு.க. அரசு, மத்தியில் உள்ள பா.ஜ.க அரசை மகிழ்விப்பதற்காக நினைவு நாளில் தந்தை பெரியாருக்கு மரியாதை  செலுத்துவதிலிருந்து விலகிச் சென்று விட்டதாக விமர் சிப்பவர்களுக்கு இடமளித்துள்ளது.
தந்தை பெரியார் பற்றி பா.ஜ.க. மிகவும் இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த போதும் அ.தி.மு.க.வோ, அதன் உயர்மட்ட தலைவர்களோ, அதற்கு அதிகார பூர்வமான எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் தி.மு. கழகத் தலைவர்  தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் பா.ஜ.க.வை எச்ச ரிக்கை செய்து கருத்து தெரிவித்தார்.
இவ்வாறு *டி.டி. நெக்ஸ்ட் ” இதழில் அதன் செய்தியாளர் சென்னை - யாழினியன் எழுதியுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...