Tuesday, December 10, 2019

உணவகங்களில் ஆண்-பெண்களுக்கு தனித் தனி நுழைவு விதிமுறை ரத்து

சவூதி அரேபிய உணவகங்களில் தனியாக வரும் ஆண்களும், குடும்ப தினருடனோ, தனியாகவோ வரும் பெண்களும் தனித் தனியான நுழைவு வழியாகப் பிரித்து அனுமதிக்கப்பட வேண் டும் என்ற விதிமுறையை அந்த நாட்டு அரசு நீக்கியுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சவூதி அரேபியாவில் திரு ணமாகாத பெண்களும், ஆண் களும் ஒருவருடன் ஒருவர் பழகுவதைத் தடுக்கும் வகை யில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, உணவகங்க ளுக்கு தனியாவே, ஆண்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பி னர்களுடனோ வரும் பெண் கள் தனி நுழைவு வழியாக அனுமதிக்க வேண்டும் என்று விதிமுறை இருந்து வந்தது.
பெண் குடும்ப உறுப்பினர் அல்லாமல் தனியாக வரும் ஆண்களுக்கு அந்த வழியாகச் செல்ல அனுமதியில்லை.
அவர்களுக்கென்று ஒதுக் கப்பட்டுள்ள வழியில்தான் அவர்கள் உணவகத்துக்குள் செல்ல முடியும். இந்த தனித் தனி நுழைவு விதிமுறை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழைமைவாத நாடாக அறியப்படும் சவூதி அரேபி யாவின் பட்டத்து இளவரச ராக முகமது பின் சல்மான் பதவியேற்ற பிறகு, அந்த நாட் டில் பெண்கள் கார் ஓட்டுவ தற்கான தடை நீக்கம் உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, உணவகங்களில் ஆண்களும், பெண்களும் தனித் தனியாக நுழைய வேண்டும் என்ற விதி முறை தற்போது நீக்கப்பட்டு உள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...