Monday, December 16, 2019

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு பிரிட்டனில் இந்திய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்


பாஜக அர சின் புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு ஏரா ளமானோர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.
புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்டது. அந்த மசோ தாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு, உள்நாட்டில் பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் பன் னாட்டு அளவிலும் சர்ச்சை கிளப்பியுள்ளது.
பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக இணைந்து திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அங்குள்ள இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடத்தினர். அப்போது அவர்கள், மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்து விட்டதாக முழக்கங்களை எழுப்பினர்.
அதிலும் குறிப்பாக இந் தப் போராட்டத்தில், பிரிட் டனில் வசிக்கும் அசாம் சமூ கத்தினர் தங்களுடைய பாரம் பரிய உடையை அணிந்து குழந்தைகளுடன் பங்கேற்று தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து பிரிட்டனில் உள்ள வெளிநாடு வாழ் இந் தியர்களின் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறு கையில்,
‘பொருளாதார நெருக் கடி, அதிக வேலைஇழப்பு, விவசாயிகள் வேதனை, பிளவு அரசியல் என அனைத்து விதத்திலும் மோடி அரசு தோல்வியடைந்து விட்டது. அதனை எடுத்துக்காட்டும் விதத்திலேயே இந்த ஆர்ப் பாட்டம் நடைபெறுகிறது’ என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...