பீகாரைச் சேர்ந்த துணை லெப்டினென்ட்
ஷிவாங்கி, இந்தியக் கடற்படையின் முதல் பெண் பைலட்டாகப் பொறுபேற்றுள்ளார்.
கடற்படையில் பெண் விமானிகளைப் பணியமர்த்துவதற்கான ஒப்புதலை அமைச்சரவை
2018இல் வழங்கியது. அதையடுத்து கடற்படை அகாடமியில் ஷிவாங்கி விமானப்
பயிற்சியில் இணைந்தார். சில மாதங் களுக்கு முன் அவர் பயிற்சியை
நிறைவுசெய்தார்.
பின்னர் டிசம்பர் 2 அன்று கொச்சியில் உள்ள
கடற்படைப் பயிற்சித் தளத்தில் துணை லெப்டினென்டாகத் தன் பணியைத்
தொடங்கினார் ஷிவாங்கி. கடற்படையில் டார்னியர் கண்காணிப்பு விமானப் பிரிவில்
அவர் பணியாற்றவுள்ளார்.
கடற்படையில் பல்வேறு பிரிவுகளில் பெண்கள்
பணியாற்றிவருகிறார்கள். ஆனால், விமானப் பிரிவில் இந்தத் தொடக்கம் மற்ற
பெண்களுக்கு உந்துசக்தியாக இருக்கும் என நம்புகிறேன். எதிர் காலத்தில்
கடற்படை விமானப் பிரிவில் இணையும் பெண்கள் போர் விமானங்களை இயக்குவதற்கான
வாய்ப்புகள் கிடைக்கும் எனக் கூறியுள்ளார் ஷிவாங்கி.
No comments:
Post a Comment