வெறுப்புகளை உண்டாக்கும் பேச்சுகளைத்
தடுப்பதற்கான சிறப்பு ஆலோசகராக அய்.நா. பொதுச்செயலாளரிடம் பணி யாற்றும்
அடாமா டியங், இந்த மாதம் இனப்படுகொலைத் தடுப்பு நாளை யொட்டிப் பேசியபோது
"யூத இனப்படுகொலைகள் விஷ வாயுக் கூடங்களிலிருந்து தொடங்கவில்லை. வெறுப்பான
பேச்சு களின் வழியே வெகுகாலத்துக்கு முன்பே அது தொடங்கிவிட்டது" என்று
கூறியிருக்கிறார்.
ஒரு அரசியல் கருவியாக, குடியுரிமைச்
சட்டத் திருத்தம் - குடிமக்கள் பதிவேடு இரண்டும் வெறுப்பான பேச்சை,
குறிப்பாகத் தேர்தல் நேரத்திலாவது உருவாக்கப் போதுமானவை. ஒரு நிர்வாகக்
கருவியாக, இனப்படுகொலைகளுக்கான சூழ்ச்சிகளுக்கு எதிரான அரசமைப்புச் சட்டப்
பாதுகாப்புகளை அவை பலவீனப் படுத்தவும் செய்யும்.
விலக்கி வைத்த முன்னுதாரணங்கள்
இப்படிக் குடியுரிமையிலிருந்து விலக்கி
வைக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டதற்கும், கடைசியில் அவை எங்கு போய்
முடிந்தன என்பதற்கும் ஏகப்பட்ட வரலாற்று முன்னுதாரணங்கள் உண்டு. 1935இன்
'ரெய்ச் குடியுரிமைச் சட்டம்' ஜெர்மானிய யூதர்களின் குடியுரிமையைப்
பறித்தது. அதைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பது எல்லோருக்குமே தெரியும்.
மியான்மரில், 1982-இன் ‘குடியுரிமைச் சட்டம்', அராகன் பிராந்தியத்தைப்
பூர்வீகமாகக் கொண்ட ரோஹிங்கியா முஸ்லிம்களை நாடற்றவர்களாக ஆக்கியது.
பன்னாட்டு நீதிமன்றத்தின் முன் மியான்மர் இப்போது இனப்படுகொலைக்
குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கிறது.
இந்திய அரசு, 'எந்தவொரு இந்தியரும்
குடியுரிமையை இழக்க மாட்டார்கள்' என்று அளிக்கும் உத்தரவாதங்கள்
வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், குடியுரிமைச் சட்டத் திருத்தம் -
குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றின் பிரிவுகள், முஸ்லிம்களை ஏதோ ஒருவகையில்
இந்தியர்கள் என்பதிலிருந்து தடுத்து வைக்கும் என்ற எண்ணத்தால்தான் அதற்கு
எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் தங்களது குடியுரி
மையை இழந்தால், அரசும் வழக்கம்போலவே எந்தவொரு இந்தியரும் தங்களது
குடியுரிமையை இழக்கவில்லை என்றே சொல்லிக்கொண்டிருக்கும். யார் இந்தியர்
என்பதையும், யாரெல்லாம் இல்லை என்பதையும் அரசுதானே முடிவு செய்கிறது!
- நன்றி: ‘தி தமிழ் இந்து' 23,12,2019, பக்கம் 7
No comments:
Post a Comment