முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
புதுடில்லி,டிச.18-பெரும் பான்மை உள்ளதால்
நினைத் ததை எல்லாம் நிறைவேற் றிக் கொள்ள முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு
உகந்த தல்ல என முன்னாள் குடி யரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி
தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற வாஜ்பாய் நினைவு சொற்
பொழிவில் பிரணாப் முகர்ஜி கலந்து கொண் டார். அப்போது பேசிய அவர் அரசியல்
கட்சி க ளுக்கு, தேர்தல்களில் பெரும் பான்மை இடங்கள் கிடைத் திருக்கலாம்.
ஆனால், பெரும்பான்மை மக்கள் ஒரு அரசியல் கட்சியை எப்போதும் ஆதரித்த தில்லை
என்று கூறினார்.
பெரும்பான்மை உள்ள தால் நினைத்ததை எல்லாம்
நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பது ஜன நாயகத் திற்கு உகந்ததல்ல என்று கூறிய
அவர், இவ்வாறு நினைப்பவர்களை மக்கள் தண்டித்து வந்துள்ளனர் என்று
தெரிவித்தார்.
தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப சட்ட
மன்ற, நாடாளுமன்ற உறுப் பினர்களின் எண்ணிக்கை இல்லை என்று தெரிவித்த
பிரணாப் முகர்ஜி, மக்க ளவை உறுப் பினர்களின் எண்ணிக்கையை 543லிருந்து
ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment