Monday, December 16, 2019

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி


இங்கிலாந்து நாட்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பழைமைவாத கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் தோல்வி யைத் தழுவியுள்ள எதிர்க்கட் சியான தொழிலாளர் கட்சி யின் தலைவர் ஜெரேபி கார் பைன் பதவி விலக வேண்டும் என்று கட்சிக்குள் குரல் வலுத்து வருகிறது. அவரும் இன்னொரு பொதுத்தேர்த லுக்கு கட்சியை நான் வழி நடத்தமாட்டேன் என அறிவித்துள்ளார். இந்த நிலையில் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி அங்கு எழத்தொடங்கி விட்டது. 40 வயதான இந்திய வம்சாவளி பெண் நாடாளு மன்ற உறுப்பினர் லிசா நண்டி போட்டியில் குதித்துள்ளார். இதை அவர் நேற்று உறுதி செய்தார்.
நடந்து முடிந்த நாடா ளுமன்ற தேர்தலில் இவர் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள விகான் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை இந்தியர், தாயார் ஆங்கிலேயர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...