மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியு ரிமை
திருத்தச் சட்டத்தை கேர ளாவில் அமல்படுத்த மாட்டோம், என்று கேரள
முதல்அமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும்
அனைத்துக் கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள் கேரள அரசின் முடிவுக்கு ஆதரவு
தர வேண்டும் என்றும் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து திருவனந்தபுரம் பாளையத்தில்
உள்ள தியாகிகள் நினைவிடம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரின்
சார்பில் அறவழியில் கண்டனப் போராட் டம் நடந்தது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து நடந்த இப் போராட்டத்தில் முதல்-அமைச்சர் பினராயி விஜயனும் கலந்து கொண் டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டில் மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சி செய்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை களை அமல்படுத்தவே
பா.ஜனதா தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின் இறையாண்மை மீது
நம்பிக்கை கொண்டவர்கள் இதனை ஏற்க மாட்டார்கள்.
நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க
முயற்சிக்கும் பா.ஜனதா வின் நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும். இதற்காகவே
இந்த போராட் டம் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட் டத்திற்கு
எதிராக கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டத்தில் காங் கிரஸ் கட்சியும் இணைந்து
கொண்டது. எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, முதல் அமைச்சர் பினராயி
விஜயனுடன் போராட்டக் களத்தில் பங்கேற்றார். ஏராளமான காங்கிரஸ் தொண்
டர்களும் இதில் கலந்து கொண்டனர்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு
எதிராக திரிபுரா முன்னாள் மகாராஜா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்,
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கடந்த 13-ஆம் தேதி தனிப்பட்ட முறையில்
இந்த வழக்கை தொடர்ந்துள்ள ஜெய்ராம் ரமேஷ் தனது மனுவில், ‘விரைந்து
நிறைவேற்றப்பட்ட இந்த குடியுரிமை சட்டம் தொடர்பாக அவசர சூழ்நிலை
ஏற்பட்டுள்ளதால் இதுதொடர்பாக அவசர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால்
மதிப்புக்குரிய நீதிமன்றத்தை நாடியுள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதைதொடர்ந்து 18-ஆம் தேதி (புதன்கிழமை)
விசாரிக்க நீதிபதிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதேபோல், திரிபுரா
முன்னாள் (மற்றும் கடைசி) மன்னரின் மகன் கிரிட் பிரட்யோட் டேப் பார்மன்
மற்றும் சிலர் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளும் 18-ஆம்
தேதி விசாரிக்கப்படுகின்றன.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு
பீகாரில் 21-ஆம் தேதி முழு அடைப்பு
லாலு பிரசாத் ஜனதாதளம் அறிவிப்பு
மத்திய அரசின் குடியுரிமை
திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து
வருகின்றன. அந்தவகையில் பீகாரில் 21-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த
லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி அழைப்பு விடுத்து உள்ளது.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ்
பிற கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இது தொடர்பாக தனது சுட்டுரைத் தளத்தில்
அவர் கூறுகையில், ‘குடியுரிமை திருத்த சட்டம் ஒரு கறுப்பு சட்டமாகும். இது
அரசியல் சாசனத்தை அடித்து நொறுக்கி உள்ளது. எனவே இதை கண்டித்து ராஷ்ட்ரீய
ஜனதாதளம் வருகிற 21-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தும். அனைத்து
மதசார்பற்ற கட்சிகள், அரசியல் சாரா அமைப்புகள் மற்றும் அரசியல் சாசனம் மீது
நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ என
கேட்டுக்கொண்டு இருந்தார்.
முன்னதாக இந்த போராட்டம் 22-ஆம் தேதி
நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் மாநிலத்தில்
காவல்துறைப் பணிக்கான எழுத்து தேர்வு நடப்பதால், ஒருநாள் முன்னதாக
நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment