Tuesday, December 24, 2019

மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் 8ஆம் தேதி வேலை நிறுத்தம்

மத்திய அரசின் நட வடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் வருகிற 8ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி அதிகாரிகள் யூனியன் சங்கத்தின் ஒருங்கிணைந்த மாநாடு சென்னையில் மயிலாப் பூரில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க செயலாளர் வைரப்பன் தலைமை தாங்கினார். அதிகாரிகள் யூனியன் பொதுச்செயலாளர் டி.வி.பாஸ்கரன், ஊழியர் சங்க பொதுச் செயலாளர் இ.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் அருணாச்சலம், தமிழ் நாடு வங்கி ஊழியர் சங்க தலைவர் சி.எஸ்.வேணுகோபால், சீனிவாசன் ஆகியோர் கொண்டனர்.
மாநாட்டில் மத்திய, மாநில அரசுகள் மறுமுதலீட்டினை வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தொடர்ந்து அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் அளித்த பேட்டி:
இந்திய பொருளாதாரம் மந்த மான நிலையில் உள்ளது. அதை சரி செய்ய வங்கிகள் திறமையாக செயல் பட வேண்டும். ஆனால் மத்திய அரசு பெரிய முதலாளிகள் வங்கி களில் பெற்றுள்ள கடனை தள் ளுபடி செய்துள்ளது. இந்த கடன் தள்ளுபடி என்பது சாதாரண மக் களின் மீது திணிக்கப்பட்டு வருகி றது. இதை வன்மையாக  கண்டிக்கி றோம். மேலும் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது. வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். ஊழி யர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். தொழிலா ளர் விதியை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் திருத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு நடவடிக்கையை கண் டித்து வருகிற 8ஆம் தேதி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் போராட்டத் தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட் டத்தில் தமிழகத்தில் 50,000 ஊழியர்களும், இந்தியா முழுவதும் 6 லட்சம் ஊழியர் களும் பங்கேற்க உள்ளனர். அது மட்டுமல் லாமல் மத்திய அரசு தொழிற்சங்கங்களான ஐஎன்டியூசி, ஏ.அய்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் போராட் டத்தில் பங்கேற்கிறார்கள். இதனால், அன்றைய தினம் ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கிகள், ரயில்வே தேர்வு வாரியம், எல்அய்சி(ஆயுள் காப்பீட்டு கழகம்) மற்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறு வனம், ரயில்வே, துறைமுகம், சாலை போக்குவரத்து துறை ஊழியர்கள், ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் என சுமார் 25 கோடிக் கும் அதிகமான ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள் ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டுறவு வங்கிகள் இயங்காது
கூட்டுறவு வங்கி ஊழியர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மேலும் வருகிற 8ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டத்துக்கும் தமிழ் நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம், தமிழ்நாடு மாநில  தலைமை கூட்டுறவு வங்கி அதிகாரிகள் யூனியன் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இத னால், அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிப் பணிகளும் முற்றிலுமான முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...