Saturday, December 7, 2019

ரூ.28,000 கோடி திரட்ட ஏர்டெல் இயக்குநர் குழு அனுமதி

தொலைத் தொடர்பு சேவை நிறுவன மான பார்தி ஏர்டெல் நிறு வனத்தின் இயக்குநர் குழு ரூ.28,000 கோடி திரட்டிக் கொள்ள ஒப்புதல் வழங்கியுள் ளது.
இதுகுறித்து அந்த நிறுவ னம் பங்குச் சந்தை ஒழுங் காற்று அமைப்பான செபியி டம் கூறியுள்ளதாவது:
விரிவாக்க நடவடிக்கை களுக்கு தேவையான 400 கோடி டாலரை (ரூ.28,000 கோடி) திரட்டிக் கொள்ளும் திட்டத்துக்கு நிறுவனத்தின் இயக்குநர் குழு தனது ஒப்பு தலை வழங்கியுள்ளது.
அதன்படி, திரட்டப்படும் மொத்த நிதியில் 200 கோடி டாலரை தகுதி வாய்ந்த நிறு வனங்களுக்கு ஒன்று அல்லது பல கட்டங்களாக பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் திரட்டிக் கொள்ளப்படும்.
எஞ்சியுள்ள 200 கோடி டாலரில், 100 கோடி டாலரை வெளிநாட்டு கடன்கள் வாயிலாகவும், 100 கோடி டாலரை மீட்கக்கூடிய வகையிலான பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்க ளாக வெளியிட்டும் திரட்டிக் கொள்ளப்படும் என பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...