பாகிஸ்தான் தலைநகர் இசுலாமாபாதில் பிரதமர்
இம்ரான் கான் தலைமையில் அந்நாட்டு தேசிய பாது காப்பு கமிட்டி கூட்டம்
புதன்கிழமை நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் வெளி யுறவு அமைச்சர், பாதுகாப்பு
அமைச்சர், உள்துறை அமைச்சர், முப்படை தலைமைத் தளபதிகள், அய்எஸ்அய் உளவு
அமைப்பின் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீருக்கு
அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்திருப்பது குறித்து
விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியா வுடனான இருதரப்பு வர்த்தகத்தை
ரத்து செய்வது, இருதரப்பு உறவுகள் தொடர்பான ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்வது
என்று முடிவெடுக்கப்பட்டது.
இதன்பின்னர் பாகிஸ்தான் மக்களுக்கு தொலைக்
காட்சி மூலம் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி உரை
நிகழ்த்தினார். அவர் கூறியதாவது:
டில்லியில் பாகிஸ்தான் தூதர் இனிமேல்
இருக்க மாட்டார். அதேபோல், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டுக்கு
திருப்பி அனுப்பப்படுவார் என் றார்.
அதேபோல், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு
கமிட்டி கூட்டத்துக்கு பிறகு வெளியிடப்பட்ட அறிவிக்கையில், "ஜம்மு-காஷ்மீர்
மற்றும் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதி தொடர்பான இந்திய அரசின்
சட்டவிரோதமான, தன்னிச்சையான நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை
நடத்தப்பட்டது.
இதையடுத்து இந்தியாவுடனான ராஜீய உறவுகளைக்
குறைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதேபோல் இந்தியாவுடனான இருதரப்பு
வர்த்தகத்தை நிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், காஷ்மீர் விவகாரம் தொடர்பான
இந்தியா வின் நடவடிக்கை குறித்து அய்.நா.விடமும், அய்.நா. பாதுகாப்பு
கவுன்சிலிடமும் முறையீடு செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது. வரும் 14ஆம்
தேதி கொண்டா டப்பட இருக்கும் பாகிஸ்தான் சுதந்திர தினத்தை காஷ்மீர்
மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் தினமாக கடைப்பிடிக்கவும், ஆகஸ்ட் 15ஆம்
தேதியை கருப்பு தினமாக அனுசரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லையில் தீவிர கண்காணிப்புடன்
இருக்கும்படியும் ராணுவத்தை இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்' என்று அந்த
அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் அஜய்
பிசாரியா, இஸ்லாமாபாதில் உள்ளார். அதேநேரத்தில், இந்தியா வுக்கான
பாகிஸ்தான் தூதர் மொயின் உல் ஹக் இன்னும் தனது பொறுப்பை ஏற்கவில்லை.
No comments:
Post a Comment