ஆர்ட்டிக் பனிக் கடல் பகுதியில் தூய பனி
பெய்யும். ஆனால், அதிலும் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்திருப்பதை, ஜெர்
மனியின் ஆல்பிரட் வெகெனர் இன்ஸ்டிடி யூட்டின் விஞ்ஞானிகள் கண்டறிந்து
உள்ளனர்.
பவேரியா பகுதியில், அவர்கள் எடுத்த ஒரு
லிட்டர் பனியில், 1.5 லட்சம் பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருந்தன. உரசும்
வாகன சக்கரம் முதல் குழாய்கள் வரை, பலவழிகளில் பிளாஸ்டிக் துகள்கள்
காற்றில் கலக்கின்றன.
உணவு வழியே மனித குடலுக்குள்ளும்,
குப்பைகளாக கடலுக்குள்ளும் கலந்துவிட்ட பிளாஸ்டிக், இப்போது காற்றின் வழியே
நம் சுவாச பைகளுக்குள்ளும் வருகிறதா என, விஞ்ஞானிகள் ஆராய்ந்து
வருகின்றனர்.
No comments:
Post a Comment