இலக்கியத் துக்கான நோபல் பரிசை பெற்ற
முதல் கருப்பின பெண் என்ற பெருமைக்குரியவரும், உலக புகழ்பெற்ற எழுத்தாள
ருமான டோனி மாரீசன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88.
ஆப்பிரிக்க-அமெரிக்க ரான இவர் தன்னுடைய 40
ஆவது வயதில் ‘தி ப்ளூஸ்ட்’ என்ற பெயரில் முதல் நாவலை வெளியிட்டார்.
1987ஆம் ஆண்டு வெளியான ‘அன்புக் குரியவர்’ என்ற நாவல் டோனி மாரீசனை
உலகப்புகழ் பெற செய்தது. பின்னாளில் அந்த நாவல் திரைப்படமாகவும்
எடுக்கப்பட்டது.
1993ஆம் ஆண்டு அவ ருக்கு இலக்கியத்துக்கான
நோபல் பரிசு வழங்கப்பட் டது. அமெரிக்க இலக்கியத் தில் அவரது பங்களிப்பை
கவு ரவிக்கும் வகையில் 1996ஆம் ஆண்டு தேசிய புத்தக அறக் கட்டளை அவருக்கும்
பதக் கம் வழங்கியது. அதே போல், சுதந்திரத்துக்கான அதிபர் பதக்கத்தை
ஒபாமாவிடம் இருந்து அவர் பெற்றார்.
1970 தொடங்கி 2015ஆம் ஆண்டு வரை டோனி மாரீ
சன் 11 நாவல்களை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பி டத்தக்கது. டோனி
மாரீசன் மறைவுக்கு முன்னாள் அதி பர் ஒபாமா உள்பட பல அர சியல் தலைவர்களும்,
இலக்கி யவாதிகளும் ஆழ்ந்த இரங் கல் தெரிவித்துள்ளனர். டோனி மாரீசன்
கருப்பின மக்களுக் கான தனிமொழியை தமது இலக்கியப் படைப்புகளில் உருவாக்க
முயற்சித்தவர் என் றும், அமெரிக்காவின் பன் முக கலாச்சாரத்தை உலகிற்கு
உரக்க தெரிவித்தவர் என்றும் அவர்கள் புகழாரம் சூட்டி யுள்ளனர்.
No comments:
Post a Comment