புதுடில்லி
ஆக. 24 நாட்டின் பொருளாதாரம் கடும் தேக்க நிலை
யைச் சந்தித்து வருகிறது. வாகனத் தொழில் நிறுவனங்களின்
வீழ்ச்சி, பல்வேறு தொழில்களின் நசிவு,
உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு ஆகியவை பொரு ளாதார
வீழ்ச்சியை மோசமாக்கியுள்ளது.
முன்னாள்
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்
ராஜன், தலைமை பொருளா தார
ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர்
அரவிந்த் சுப்ரமணியன், முன்னாள் பிரதமரும், பொருளாதார அறிஞருமான மன் மோகன் சிங்
உள்ளிட்ட பல்வேறு பொருளாதார அறிஞர்களின்
கருத்து களும் இந்தியாவில் அதிபயங்கரமான
பொருளாதாரச் சீர்கேடு ஏற்பட்டி ருப்பதை எச்சரிக்கை செய்துள்ளனர்.
இருப்பினும் பா.ஜ.க. தலைவர்
களும், அமைச்சர்களும் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளதை
ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பொய் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் நாட்டின் பொரு ளாதார வளர்ச்சிக்காக
மோடியால் அமைக்கபப்ட்ட நிதி
ஆயோக் அமைப்பின் தலைவர்
ராஜிவ் குமார், பிரதமருக்கான பொருளாதார
ஆலோசனைக்குழு உறுப்பினர் ஷமிகா உள்ளிட்டோரும் பொருளா
தார வீழ்ச்சி குறித்து எச்சரித்தனர்.
நிதி ஆயோக் தலைவர் ராஜிவ்
குமார் ஏ.என்.அய்
நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கடந்த
70 ஆண்டுகளில் நிதித்துறை இதுபோன்ற சறுக்கலைக் கண்டதில்லை.
ஒட்டு மொத்த நிதித்துறையும் நெருக்கடியில்
உள்ளது. பொருளாதார நிலை இன்னும் மோசமடைய
வாய்ப்புள் ளது. அரசு உடனடியாக
ஏதாவது செய்தாக வேண்டும்.
கடந்த
5 ஆண்டுகளாக பொருளா தார வளர்ச்சியில்
நாடு எதிர் கொண் டிருக்கும்
மோசமான நிலையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
அரசுத் துறைகள் மட்டுமல்லாமல், தனியார்
துறைகளும் கடுமையான நெருக்கடி களைச் சந்தித்து வருகின்றன.
தனியார் துறையின் அச்சத்தை அகற்ற மத்திய அரசு
தன்னால் முடிந்ததைச் செய்யவேண்டும். எனத் தெரிவித்தார்.
ராஜிவ்
குமாரின் பேட்டி நாட்டில் பெரும்
அதிர்வலையை ஏற்படுத்தி யுள்ளது, மோடி பாரீஸ் நகருக்குச்
சென்று இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக
முன்னேறிவருகிறது என்று கூறிக் கொண்டு
இருக்கும் நிலையில் நிதி
ஆயோக் தலைவரின் பேச்சு மோடியை மீண்டும்
ஒரு பொய்யர் என்று உறுதிசெய்துள்ளது.
இந்த நிலையில் பாஜகவினர் நிதி ஆயோக் தலைவரை
மிரட்டும் விதமாக பேசியுள்ளனர்.
இதனை அடுத்து அவர் தனது
பேச்சை ஊட கங்கள் தவறாக
மொழி பெயர்த்து விட்டது என்று கூறியுள்
ளார்.
பா.ஜ.க அரசு
பொருளாதார நெருக்கடி நிலையை வெவ்வேறு பிரச்சி
னைகளைப் பயன்படுத்தி திசை திருப்பி வந்த
நிலையில், ராஜிவ் குமார் பொருளாதார
தேக்க நிலையை வெளிப்படையாகத் தெரிவித்துள்
ளார்.
முக்கியமாக
தனது ஆட்சியின் தொடர் தோல்வியை மறைக்க
மோடி மற்றும் அமித்ஷா போன்றோர்
தொடர்ந்து முயற்சி செய்தும் உண்
மைகள் வெளியே வருவதை தடுக்க
முடியவில்லை. இதனால் மிரட்டல் வேலையில்
ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment