ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து
ரத்துக்கு முன்னதாக, 4,000 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்
பட்டுள்ளதாகவும், சிறைகள் நிரம்பி வழிவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், கைதானவர்கள் 2 ஆண்டுகள் வரை வெளியே வரமுடியாத பிரிவில் கைது
செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏஎப்பி என்ற பிரான்ஸ் செய்தி
நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: கடந்த 5ஆம் தேதி ஜம்மு -
காஷ்மீர் சிறப்புத் தகுதி ரத்து தொடர்பான அறிவிப்புக்கு முன்பும், பின்பும்
பிஎஸ்ஏ எனப்படும் பொது பாதுகாப்பு சட்டப்படி 4,000 பேர் தடுப்பு காவலில்
வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சட்டப்பிரிவின்படி அதிகபட்சமாக 2
ஆண்டுகள் வரை சிறை வைக்க அனுமதிக்கப்படுகிறது. அதாவது, 2 ஆண்டுகள் வரை
விசாரணையோ, குற்றப்பத்திரிகை பதிவு இல்லாமலோ சிறையில் வைக்கலாம். இவர்கள்
ஒரே சிறையில் அடைக்கப் பட்டுள்ளதால், சிறை நிரம்பி உள்ளது.
கைது விவரங்களை, அரசு தரப்பில்
தெரிவிக்கவில்லை. நீதிபதி ஒருவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கைது
விவ ரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில், முன்னாள் முதல் வர்கள்,
மேயர்கள், துணை மேயர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் உள்பட
100க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், கல்வி யாளர்கள், வழக்குரைஞர்கள்
அடங்குவர். சிறீநகரில் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களில்,
சுமார் 6,000 பேர் மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் முதலில்
சிறீநகரில் உள்ள மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் ராணுவ விமானம்
மூலம் பக்கத்து மாநில சிறைக்கு மாற்றப்பட்டனர். சிலர் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை காஷ்மீர் தலைநகர் சிறீநகரில் 12க்கும் மேற்பட்ட இடங்களில்
பாதுகாப்புப் படையின ருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் நடந்தது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment