சமீபத்தில் இந்தியாவின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர்களை நோக்கி முன்னேறி வருகிறது. இதற்கு பாஜக ஆட்சிதான் காரணம் என்று பாஜகவினர் கூறி வந்தனர்.
இந்நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர்
பிரணாப் முகர்ஜி, இந்தியாவின் பொரு ளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர்களாக
முன்னேறுவ தற்கு முந்தைய அரசுகள்தான் காரணம் என்று கூறியுள்ளார்.
டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்
கலந்து கொண்டு பேசியவர், வரும் 2024ஆம் ஆண்டு இந்தியா வின் பொருளாதாரம் 5
ட்ரில்லியன் டாலராக உயரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தெரிவித்துள்ளார். இதற்கு முந் தைய அரசுகளே காரணம். பொருளாதார உயர்வுக்கு
பிரிட்டிஷ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப் பிட்டவர்,
சுதந்திரத்துக்கு பிறகு இந்தியர்களே முன் னேற்றத்தைக் கொடுத்ததாக வும்
கூறினார்.
காங்கிரசின் 55 ஆண்டு கால ஆட்சியை
விமர்சிப்பவர்கள், நாம் முந் தைய நாட்களில் எங்கிருந் தோம், தற்போது எங்கு
இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு பேசு வதாகவும், நாம் தற்போது எந்தளவுக்கு
பொருளாதார முன்னேற் றத்தை அடைந்தி ருக்கிறோம் என்பதை எண் ணிப் பார்க்க
வேண்டும் என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மேலும், ஜவஹர்லால் நேரு மற்றும் மற்ற தலை
வர்கள் இஸ்ரோ, அய்அய்டி, வங்கிகள் போன்றவற்றை அமைத்ததாகவும் இந்திய
பொருளாதார முன்னேற்றத் திற்கு இவையே முக்கிய கார ணம் எனவும் தெரிவித்தார்.
இட ஒதுக்கீடு: மத்திய அரசு தகவல்
பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த
இடங்கள் எத்தனை தெரியுமா? அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய 27 விழுக்காடு
இடங்களுக்குப் பதிலாக 21.57 விழுக்காடுதான் கிடைத்துள்ளது. எஸ்.சி.
பிரிவினருக்கு 17.45 சதவிகிதம், எஸ்.டி.,க்கு 8.47 சதவிகிதம் கிடைத்துள்ளது
என்று மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment