Wednesday, July 10, 2019

அதிகரிக்கும் ஆணவக் கொலைகள்: தாமாக முன்வந்து வழக்கை எடுத்தது உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவது தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை  விசாரணைக்கு எடுக்க இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, காலை வழக்குகளை விசாரிக்கத் தொடங்கும் முன், தமிழக அரசு வழக்குரைஞரிடம், தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவதாகவும், இதுசம்பந்தமாக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அப்போது, உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தும் ஆணவக் கொலைகள் நடக்கின்றன. தொடர்ந்து பத்திரிகைகளில் இதுசம்பந்தமாக செய்திகள் வெளியாகி வருகின்றன எனக் கூறிய நீதிபதிகள், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நேற்று (9.7.2019) பிற்பகல் விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் ஆணவக் கொலைகள் தொடர்பாக மத்திய அரசு தயாரித்துள்ள வரைவு சட்டத்தின் நிலை என்ன என்பதை விளக்க மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஆஜராகவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...