"பள்ளி வேலை நேரங்களில் ஆலோசனை கூட்டம்
என்ற பெயரில் வெளியே செல்லக்கூடாது' என ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி
இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு
அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளின் நிர்வாக விவரங்கள் மாணவர்
ஆசிரியர் விவரங்கள் போன்றவை பள்ளி மேலாண்மை இணையதளமான எமிஸில் பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளன.
இயக்குநர் அலுவலகங்களில் இருந்து இந்த
விவரங்களை கேட்டால் இணையதள விவரங்களை மின்னணு முறையில் அனுப்பி விடலாம்.
இந்த விவரங்களுக்காக ஆசிரியர்களை நேரில் அழைத்து கூட்டம் நடத்த வேண்டியநிலை
ஏற்படாது.
அதேநேரம் நிர்வாக காரணங்களுக்காக கூட்டம்
நடத்த வேண்டியிருந்தால் மாலை நேரம் அல்லது சனிக்கிழமைகளில் நடத்தலாம்.
அதனால் பள்ளி வேலை நேரம் பாதிக்கப்படாது. மேலும் தலைமையாசிரியர் மற்றும்
ஆசிரியர்கள், விவரங்களை கேட்கவும் அளிக்கவும் பள்ளி வேலை நேரங்களில் கல்வி
அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
தேவைப்படும் விபரங்களை மின்னஞ்சல் மூலமாக
அனுப்பினால் பள்ளியின் வேலை நேரம் பாதிக்கப்படாது. ஆசிரியர்களும் பள்ளி
வேலை நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். இவற்றை எல்லாம்
கண்டிப்புடன் பின்பற்றும்படி ஆசிரியர்களை முதன்மை கல்வி அதிகாரிகள்
அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment