Friday, July 19, 2019

ரசியாவை சேர்ந்த "பேஸ்ஆப்" செயலி: அமெரிக்காவில் உளவு பார்க்கிறதா? எஃப்பிஅய் விசாரணை நடத்த வலியுறுத்தல்

ரசியாவைச் சேர்ந்த "ஃபேஸ் ஆப்' என்ற செயலி அமெரிக் காவில் உளவு பார்ப்பதாக எழுந்துள்ள சந்தேகம் குறித்து எஃப்பிஅய் விசா ரணை நடத்த வேண்டும் என்று அந்நாட்டு நாடாளு மன்ற மேலவை (செனட்) உறுப்பினர் சக் சுச்மர் வலி யுறுத்தியுள்ளார்.
ரசியாவின் செயிண்ட் பிட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டது "ஃபேஸ்ஆப்' என்ற செயலி.
இதனைப் பயன் படுத்தி ஒருவர் தனது நிழற் படத் தை வயதான தோற்றத்துக்கும், இளமையான தோற்றத் துக்கும் மாற்றிக் கொள்ள முடியும். இந்தச் செயலி அமெரிக்கா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் பல ராலும் விரும்பிப் பயன் படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்தச் செயலி மூலம் அமெரிக்க மக்களை ரசியா உளவு பார்க்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக சக் சுச்மர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமெ ரிக்காவின் மிகஉயரிய விசா ரணை அமைப்பான எஃப்பி அய்-க்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அமெரிக்க மக்கள் பலராலும் "ஃபேஸ்ஆப்' செயலி பயன்படுத்தப்படு கிறது. இந்த செயலியை ரஷ்ய நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தச் செயலியை அறிதிறன் பேசியில் பதிவிறக்கம் செய்யும் போது அது பல் வேறு அனுமதிகளைக் கோரு கிறது. இதன் மூலம் அமெரிக்க மக்களின் செல்லிடப்பேசியில் உள்ள பல்வேறு தகவல்களை அந்தச் செயலியைத் தயாரித்த நிறுவனம் தெரிந்து கொள்ள முடியும். மேலும், அமெரிக்க மக்கள் பதிவேற்றும் செய்யும் நிழற்படங்களையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
எனவே, இந்த விவ காரத்தை தீவிரப் பிரச்னை யாகக் கருத்தில் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று சச் சுச்மர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக "ஃபேஸ் ஆப்' செயலி நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
அதில், எங்கள் செயலி யைப் பயன்படுத்துபவரிடம் இருந்து நிழற்படம் மட் டுமே பெறப்படும்.
அதுவும் 48 மணி நேரத்தில் எங்கள் "சர்வரில்' இருந்து தானாகவே நீங்கி விடும். மற்றபடி வேறு எந்தத் தகவல்களையும் பயனா ளர்களின் செல்லிடப்பேசி யில் இருந்து பெறுவதில்லை' என்று கூறியுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...