தமிழக சட்டமன்றத்தில் ’நீட்' மசோதாவை மீண்டும்
நிறைவேற்ற வேண்டும்
- தளபதி
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
’நீட்'
மசோதா நிராகரிப்பு குறித்து மத்திய அரசிடம் விளக்கம்
கேட்போம்
- சட்ட
அமைச்சர் சி.வி.சண்முகம்
பதில்
’நீட்'
விவகாரம் குறித்து விவாதிக்க சிறப்பு சட்டமன்ற கூட்டம்
- முதல்வர்
அறிவிப்பு
சென்னை,
ஜூலை 17- ஏழு கோடி மக்களின்
உணர்வுகளை புண்படுத்தியதற்கு கண் டிப்பதாகவும், மீண்டும்
நீட்' மசோதா நிறைவேற்றபட வேண்டும்
எனவும் எதிர்க் கட்சி தலைவர்
தளபதி மு.க.ஸ்டாலின்
சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்.
மு.க.ஸ்டாலின்
சட்டமன்றத்தில்
இன்று (17.7.2019) கேள்வி நேரம் முடிந்ததும்,
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தளபதி மு.க.ஸ்டா லின்
அவர்கள் 'நீட்' மசோதாக்கள் 2017 ஆம்
ஆண்டே தமிழக அரசுக்கு திருப்பி
அனுப்பப்பட்டன என்று உயர்நீதிமன் றத்தில்
நேற்று (16.7.2019) மத்திய அரசு அறிக்கை
தாக்கல் செய்தது குறித்து பேசியதாவது:-
நீட்' தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு
அளித்து குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக அரசு அனுப்பிய
2 சட்ட மசோதாக்களும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு
கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி
20ஆம் தேதி கிடைத்தன.
அன்றைய
தினமே இந்த மசோதாக்கள் உரிய
நடவடிக்கைக்காக மத்திய உள்துறை அமைச்சகம்,
சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மனிதவள மேம்பாட்டு
அமைச் சகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர்
இந்த அமைச்சகங்களில் இருந்து உரிய கருத்துக்கள்
பெற்று கடந்த 2017 செப்டம்பர் 11ஆம் தேதி குடியரசு
தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் பட்டது.
இந்த மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நிராகரித்தும் குடியரசுத் தலைவர் 2017 செப்டம்பர் 18ஆம் தேதி உத்தரவிட்டார்.
அதன் பிறகு அந்த 2 சட்ட
மசோ தாக்களும் 2017 செப்டம்பர் 22ஆம் தேதியே
தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.
அதற்கான ஆவ ணங்களும் இத்துடன்
இணைக்கப்பட்டுள் ளன என சென்னை
உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில்
நேற்று (16.7.2019) மத்திய அரசு உள்துறை
அமைச்சக துணைச் செயலாளர் ராஜிஸ்
எஸ்.வைத்யா தாக்கல் செய்த
அறிக்கையில் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார் தளபதி மு.க.ஸ்டாலின்
இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே...
மேலும்,
அப்போது தமிழக அரசின் வழக்குரைஞரை
நீங்கள் அனுப்பி இருந் தீர்களா?
ஒரு மசோதாவை குடியரசுத் தலைவர்
நிராகரித்தால் 6 மாதத்தில அதை மீண்டும் சட்டமன்றத்தில்
நிறை வேற்றி அனுப்பி வைக்க
விதி உள்ளது என்று குறிப்பிட்டு,
7 கோடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்கு கண் டிப்பதாகவும், மீண்டும்
'நீட்' மசோதாவை இந்த சட்டமன்ற
கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
சி.வி.சண்முகம் பதில்
இதற்கு
பதில் அளித்து பேசிய சட்டத்
துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,
'நீட்'
மசோதா நிராகரிக்கப்பட்ட தற்கான காரணம் என்ன
என்பது பற்றி மத்திய அரசிடம்
பதில் இல்லை. இந்த மசோதா
நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து
விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு
கடிதம் எழுதப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தான் மத்திய அரசு
பதில் அளித்துள்ளதே தவிர தமிழக அரசின்
கடிதத்துக்கு பதில் அளிக்கவில்லை என
அமைச்சர் சி.வி.சண்முகம்
தெரிவித்தார்.
முதல்வர்
பதில்
இதைத்தொடர்ந்து
இது குறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி,
நீட்' தேர்வு விவகாரத்தில் சிறப்பு
சட்டமன்ற கூட்டத்தை கூட்டி விவாதிக்க தமிழக
அரசு தயாராக உள்ளது.
நீட்' மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்ததற்கு
என்ன காரணம் என்று தெரியவில்லை.
பிரதமரை சந்தித்த
போது எல்லாம் நீட்' தேர்வு
விலக்கு மசோதாவுக்கு அழுத்தம் கொடுத்தேன் என கூறினார்.
No comments:
Post a Comment