Thursday, July 18, 2019

அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் கடந்த ஆண்டு வேலைவாய்ப்புப் பதிவு அலுவலகம்மூலம்

3,948 பேருக்கு மட்டுமே வேலை! காத்திருப்பவர்களோ 27 லட்சம்!!
  

சென்னை, ஜூலை18, வே¬ ல வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் கடந்த ஓர் ஆண்டில் 3,948 பேர் மட்டும் பொதுத் துறையில் பணி பெற்றுள் ளனர். ஆனால் 24 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய் துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வேலை வாய்ப்பு துறையின் கீழ் 34 மாவட்டங்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கங்கள் செயல்பட்டுவருகிறது.
இந்த வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் கல்வி தகுதிகளை இணையதளம் மூலம் பதிவு செய்தல், வேலை யளிப்பவர்களுக்கு மனுதாரர் களை பரிந்துரைத்தல், இளை ஞர்களுக்கு தேவையான தொழில் நெறி வழிகாட்டுதல், போட்டித் தேர்வுகளில் பங் கேற்பவர்களுக்கு கட்டண மில்லா பயிற்சியளித்தல், தன்னார்வ பயிலும் வட்டங் களை உருவாக்குதல், அயல் நாட்டு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்தல், திறன் பயிற் சிக்கு பதிவு செய்தல் மற்றும் வழிகாட்டுதல், வேலை வாய்ப்பு முகாம்களை நடத் துதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் மனு தாரர்களுக்கு பதிவுமூப்பு அடிப்படையில் பொதுத் துறை மற்றும் தனியார் துறை யில் பணிவழங்கும் பணியை யும் வேலைவாய்ப்பு துறை செய்துவருகிறது.
அதன்படி கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 89 ஆயிரத்து 755 பேர் பொதுத் துறையில் பணிநியமனம் பெற்றுள்ளதாக தொழிலா ளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த மார்ச் மாதம் வரை 3 ஆயிரத்து 948 பேர் மட்டுமே பொதுத் துறையில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
இதைப் போன்று தனியார் துறை வேலைவாய்ப்புகளை அதிகரிக்க ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் “வேலை வாய்ப்பு வெள்ளி” என்ற பெயரில் சிறிய மற்றும் பெரிய வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2019ஆம் ஆண்டு மார்ச் வரை 85 ஆயிரத்து 756 பேர் தனியார் துறையில் பனி நியமனம் பெற்றுள்ளனர் என்று வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறை கொள்கை விளக்க குறிப் பேட்டில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
ஆனால் 24 முதல் 58 வயதுக்குட்பட்ட 27 லட்சத்து 41 ஆயிரத்து 521 வேலை தேடுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்தி ருக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் 170 பேர்
ஜனவரி 2018 முதல் மார்ச் 2019 வரை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 170 மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பொதுத் துறை மூலம் வேலைவாய்ப்பு பெற் றுள்ளனர். இந்த காலகட்டத் தில் 1456 மாற்றுத்திறனாளிகள் தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால் 1 லட்சத்து 29 ஆயிரத்து 818 மாற்றுத்திற னாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்து கொண்டு உள்ளனர்.
பதிவு செய்து வேலை வாய்ப்புக்காக காத்திரப்போர் விவரம் வருமாறு: 18 வயதிற் குட்பட்ட  17,41,402 பள்ளி மாணவர்கள்,
18 வயது முதல் 23 வரை  16,93,351 பேர்,
24 வயது முதல் 35 வரை 27,41,521 பேர்,
35 வயது முதல் 58 வரை 11,29,429 பேர்,
58 வயதுக்கு மேற்பட்ட வர்கள்   6,687 பேர் ஆக மொத் தம்  73,12,390 பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பணி வாய்ப்புக் காக காத்திருக்கிறார்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...