உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியீடு: தமிழ் இடம் பெறவில்லை
உலக நாடுகள் முழுவதும்
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அல்லது அந்த
நாட்டின் மொழியில் வெளியிடப்படும். இந்தியா பல மொழிகளை கொண்டுள்ள நாடாக
இருந்து வரும் நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் ஆங் கிலத்தில்
வெளியிடப்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கிலத்தில் அதன்
இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. தற் போது வழக்கு முடிந்து ஆங்கிலத்தில்
தீர்ப்பு பதிவேற்றப்படும் அதே நேரத்தில் ஆங்கிலம் தவிர, இந்தி, தெலுங்கு,
கன்னடம், அசாம், ஒடியா ஆகிய அய்ந்து மொழிகளிலும் தீர்ப்பை பதி வேற்றம்
செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விரைவில் மற்ற மொழிகளிலும் தீர்ப்பு
கள் வெளியாக ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டது.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற கூடுதல்
கட்டட திறப்பு விழா இன்று நடந்தது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
இந்த விழாவில் கலந்து கொண்டார். அவரிடம் உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல்களை
நீதிபதி எஸ்.ஏ.பாப்டே வழங்கினார். இதில், உச்சநீதிமன்ற தீர்ப்புகள்
தெலுங்கு, இந்தி, ஒடியா, மராட்டி, அசாமி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில்
வெளியிடப்பட்டு உள்ளது. நீதிபதி பாப்டே வழங்கிய நகல்கள் பட்டியலில்
தமிழ்மொழி இடம்பெறவில்லை.
தமிழில் வெளிவரும் என்ற உறுதி மொழி என்னாச்சு?
No comments:
Post a Comment