Thursday, July 18, 2019

விவசாயிகளை ஏமாற்றி பதஞ்சலி நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கிய மகாராட்டிர பா.ஜ.க. அரசு!

பிரதமர் மோடியுடனும், ஆளும் பா.ஜ.க.விலும் தனக்கு இருக்கும் செல் வாக்கைப் பயன்படுத்தி, ராம்தேவ்  'சலுகைகள்' என்ற பெயரில், விவ சாயிகள் மற்றும் அரசின் நிலங் களைக் கபளீகரம் செய்துவருகிறார்.
மகாராட்டிர மாநிலம் லாட்டூர் மாவட்டத் திற்கு உட்பட்ட ஆஷா என்ற கிராமத்தில், தற்போது சுமார் 400 ஏக்கர் அரசு நிலத்தை , சந்தை மதிப்பைக் காட்டிலும் சரிபாதி குறைவான விலைக்கு, பதஞ்சலி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மின் கட்டண சலுகை மற்றும் ஜி.எஸ். டியில் சலுகை,பத்திரப்பதிவில் சலுகை என்ற ஏராளமான சலுகை களுடன், 50 சதவிகித அடிமாட்டு விலைக்கு 400 ஏக்கர் நிலம் பதஞ்சலிக்கு வாரிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பதஞ்சலிக்கு நிலம் ஒதுக்கப்பட்ட விஷயத்தில், தாங் களும் ஏமாற்றப்பட்டுள்ளதாக விவசாயிகள் கொந்தளித்துள்ள னர். தங்களிடம் இருந்து வெறும் 3.5 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே இந்த இடம் வாங்கப்பட்டதாகவும், தற் போது இந்த இடம் 45 லட்சம் ரூபாய் வரை செல்வதாகவும் விவசாயிகள் ஆவேசம் அடைந்துள்ளனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...