தானா பவன் நகரில் நடைபெற்ற இப்போராட் டம் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்த விவரம்:
சாம்லி மாவட்டத்தில் தானா பவன் நகரில்
உள்ள கோவிலுக்கு வெளியே வடி கால் சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு
தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு தாகம் எடுக் கவே கோவில்
வளாகத்தில் உள்ள கைப்பம்பிலிருந்து தண்ணீர் எடுத்துவரச் சென் றுள்ளனர்.
அப்போது கோவிலில் உள்ள அர்ச்சகர்,''குடிநீர் எடுக்க உங்களுக்கு இங்கே
அனுமதியில்லை. நீங்கள் உள்ளே வரக்கூடாது'' என்று கூறி அவர்களை வெளியே தள்ளி
கதவை மூடியுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த வால்மீகி பிரிவைச்
சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கூட் டமாகத் திரண்டு ஆர்ப்பாட் டத்தில்
ஈடுபட்டனர். ஆர்ப் பாட்டத்தின் போது கோவில் அர்ச்சகர் மீது எப்அய்ஆர்
வழக்குப் பதிவு செய்ய வேண் டுமென கோரிக்கை எழுப் பினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்
போராட்டத்தை கைவிடும் படி கேட்டுக்கொண்டனர். மேலும், இதுகுறித்து நிச்
சயமாக விசாரணை நடத் தப்படும் என்று அவர்களிடம் உறுதியளிக்கப்பட்டது.
இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment