145 அய்ஏஎஸ், அய்பிஎஸ் முன்னாள் அதிகாரிகள், இராணுவத்தினர் குற்றம் சுமத்தி கூட்டறிக்கை
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்,
தேர்தல் ஆணையம் பாரபட்சமாகவும், ஒருதலைபட்சமாகவும் செயல்பட்டதாக
குற்றம்சாட்டி, ஓய்வு பெற்ற அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகள், ராணுவ
அதிகாரிகள் மற்றும் கல்வி யாளர்கள் என 145-க்கும் மேற்பட்டோர் கூட்டாக
அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த
ஏப்ரல், மே மாதங்களில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜ, வெற்றி
பெற்று 2 ஆவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சி மட்டும் தனித்து 303
இடங்களை பிடித்தது. அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமாக 353
இடங்களை பிடித்தது. தேர்தல் நடந்து கொண்டிருந்த போதே, தேர்தல் ஆணையம்
பாரபட்சமாக செயல்படுவதாகவும், பாஜ.வின் முறைகேடு களை கண்டு கொள்ளாமல்
இருப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும்
குற்றம்சாட்டின. வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும்
புகார்கள் அளித்தன. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது தேர்தல் முடிந்து பாஜ ஆட்சி
அமைத்து ஒரு மாதத்துக்கும் மேலான நிலையில், மக்களவை தேர்த லின்போது தேர்தல்
ஆணையம் செயல் பட்ட விதத்தை முன்னாள் அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகள்,
அய்ஆர்எஸ், அய்எப்எஸ் அதிகாரிகள் 65 பேர் உட்பட மொத்தம் 148 பேர் கடுமையாக
விமர் சித்தும், கண்டித்தும் உள்ளனர். இது தொடர்பாக, முன்னாள் சிவில்
சர்வீஸ் அதிகாரிகள் வஜாகத், ஹபிபுல்லா, ஹர்ஸ் மந்தர், அருணா ராய், ஜவஹர்
சிர்கர், என்.சி.சக்சேனா, அபிஜித் செங்குப்தா, தேவ் முகர்ஜி, சிவசங்கர்
முகர்ஜி உள்ளிட்ட 65 அதிகாரிகள் கூட்டாகஅறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த
அறிக்கையை முன்னாள் ராணுவ தளபதிகள் அட்மிரல் ராம்தாஸ், அட்மிரல் விஷ்ணு
பகவத் மற்றும் கல்வியாளர்கள் 83 பேர் ஆமோ தித்துள்ளனர். இந்த
கூட்டறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கும் கடிதமாக அனுப்பி வைத்துள்ளனர்.
அதில், கூறப்பட்டு இருப்பதாவது:
சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்கவில்லை
நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த
தேர்தல்களில், 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் முழு சுதந்திரமாகவும்,
நியாயமாகவும் நடக்கவில்லை என்பது போல் தெரிகிறது. தேர்தல் தேதியை தாமதமாக
அறிவித்தது, ஒரு கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதை தெளிவாக
காட்டியது. பிரதமரின் நலத் திட்ட நிகழ்ச் சிகள் முடிவதற்காக தேர்தல்
அறிவிப்பை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தியது. வரலாற்றில் மிக நீண்ட காலம்
நடந்த தேர்தல் இதுதான். இது மத்தியில் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைந்தது
என்ற சந்தேகத்தை எழுப்பியது.
பாஜக.வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத
மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந் திரா மற்றும் தெலங்கானாவில் தேர்தல் ஒரே
கட்டமாக நடத்தப்பட்டது. பாஜக கடும் போட்டியை சந்தித்த, குறைந்த மக்களவை
தொகுதிகளை கொண்ட மாநிலங்களான கருநாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்,
ஒடிசா ஆகியவற்றில் பிரதமர் பிரச்சாரம் செய் வதற்கு அதிக அவகாசம் அளிக்கும்
வகை யில், அங்கு பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில்
நடந்த கடைசி கட்டத் தேர்தலின்போது வன்முறை பர வியதால், பிரச்சாரத்துக்கு
தடை விதித்ததுதான் தேர்தல் ஆணையத்தின் வலுவான நடவடிக்கை. அதுவும், பிரத
மரின் பிரச்சாரம் முடிந்த பிறகுதான் அந்த தடை அமலுக்கு வந்தது. புல்வாமா,
பாலகோட் தாக்குதல்பற்றி பிரதமர் தனது பிரச்சாரத்தில் பேசி தேசிய உணர்வுகளை
தூண்டியது, அதிர்ச்சி அளித்த தேர்தல் நடத்தை விதிமுறை மீற லாகும். இதற்கு
விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையம் தாக்கீது கூட அனுப்பவில்லை. பிரதமரின்
ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய ஒடிசா தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம்
செய்யப்பட்டது தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவ டிக்கை.
நமோ தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட்டு,
அதில் தொடர்ச்சியாக பிரதமரின் நிகழ்ச்சிகள், உரைகள் இடம் பெற்றதும்
அப்பட்டமான விதிமுறை மீறல். அந்த தொலைக்காட்சியை மூடும் படி தேர்தல் ஆணயம்
உத்தரவிட்டும், அது தேர்தல் முடியும் வரை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நன் கொடை
வழங்கப்படுவதில் வெளிப்படை யான தன்மை இருக்க வேண்டும் என்பதால்தான்,
தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், அவை அதிகளவில்
பயன்படுத்தப்பட்டு, மிகுந்த வெளிப்படையற்றதாக மாறியது. இந்த தேர்தலில்
பணம், தங்கம், போதைப் பொருட்கள் ரூ.3,456 கோடிக்கு கைப்பற் றப்பட்டன.
தயாரித்த இயந்திரங்களின் எண்ணிக் கைக்கும், தேர்தல் ஆணையத்தின் இருப் பில்
உள்ள இயந்திரங்களின் எண்ணிக் கைக்கும் வேறுபாடு உள்ளது. தகவல் அறியும்
உரிமை மனு மூலம் கேட்கப்பட்ட தகவலில், பொதுத்துறை நிறுவனங்கள் தயாரித்து
தேர்தல் ஆணையத்திடம் அளித்த 20 லட்சம் ஓட்டுப் பதிவு இயந் திரங்கள்,
தேர்தல் ஆணைத்தின் கிடங்கில் இல்லை என ஊடக செய்தி ஒன்று கூறுகிறது.
ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் முடிவுகளும், விவிபாட் இயந்திரங்களின்
முடிவுகளும் ஒத்துப்போகாதது வாக்கா ளர்கள் மனதில் குழப்பத்தை
ஏற்படுத்தியது. இது குறித்து பல கட்சிகள் தெரிவித்த புகார்களுக்கு, தேர்தல்
ஆணையம் ஆரம் பத்தில் இருந்தே சரியான விளக்கம் அளிக்கவில்லை.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை
பயன்படுத்தும்போது, ஒரு ஓட்டு குறைவாக இருந்தாலும், அது ஒட்டு மொத்த
தேர்தலையே சந்தேகிக்க வைக் கும். பல மாநிலங்களில் ஓட்டுப்பதிவு
இயந்திரங்கள், இரவு நேரங்களில் இடம் மாற்றப்பட்டன. இதற்கு திருப்தியான
விளக்கம் அளிக்கப்படவில்லை. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட் டுள்ளது.
கடிதம் எழுதியது ஏன்?
இந்திய ஆட்சி பணியை சேர்ந்த 64 முன்னாள்
பணியாளர்கள் உட்பட ஓய்வு பெற்ற அதிகாரிகள் பொதுத்தேர்தல் 2019 நடத்தியதில்
ஏற்பட்ட ஆபத்தான முரண்பாடுகள் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு 9 பக்க
கடிதம் எழுதி யுள்ளனர். இது தொடர்பாக அதில் பங்கேற்ற ஓய்வுபெற்ற அய்ஏஎஸ்
அதிகாரி தேவசகாயம் நாகர்கோவிலில் அளித்த பேட்டி வருமாறு:
நடந்து முடிந்த மக்களவை தேர்தல்
நடத்தப்பட்ட விதம் தொடர்பாக மக்கள் மத்தியில் பல சந்தேகங்கள் உள்ளது.
கடந்த 23 ஆம் தேதி தேர்தல் முடிவு வந்த பிறகு ஆய்வுசெய்து அறிக்கை தயாரித்
தோம். இரண்டு அதிகாரிகள் இதனை வடிவமைத்தனர். இதனை தேர்தல் ஆணையத்துக்கு
அனுப்பி வைத்துள் ளோம்.
இதில் முக்கியமாக 6 மாநில தேர்தல்கள்
எப்படி நடந்தது? என்பது பற்றி தெரிவித்துள்ளோம். பொதுவாக தேர்தல் என்றால்
வாக்காளர்கள் விடுபடக் கூடாது. ஆனால் 10 கோடி பேர் இந்த தேர்தலில்
விடுபட்டுள்ளனர், வாக்கா ளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். விடுபட்ட வர்கள்
மெஜாரிட்டி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள். இதனைபற்றி தேர்தல் ஆணையம்
நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் நாள் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில்
ஆளும் கட்சிக்கு சாதகமாக நடத்தப்பட்டது. வாய்ப்பு உள்ள இடங்களில் இரண்டு,
மூன்று நாட்களாக தேர்தலை நடத்தினர். பிரதமர், அவரது கட்சி தலைவர்கள்
பிரச்சாரம் செய்ய வசதியாக தேர்தல் அட்டவணை வகுக்கப்பட்டது. தேர்தல்
ஆணையத்துக்கு அதிகாரம் இருந்த போதும் தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று விதி
மீறல்களை ஆதரித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment