Thursday, July 11, 2019

கொசுவை விரட்டும் இயற்கை புரதம்!

கொசுக்களை விரட்ட துவப்படும் மருந்துகள் மனிதர்களுக்கும், பிற விலங்குகளுக்கும் நச்சுத் தன்மை ஏற்படுகிறது.

அண்மையில், கொசுவை மட்டும் கொல்லும் ஒரு மருந்தை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதர்களுக்கு மலேரியாவை தொற்ற வைக்கும் அனாபிலஸ் கொசுக்கள் மீது பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணிகள் குடியேறு கின்றன.

இவை தான் மலேரியாவை மனிதருள் உண்டாக்குகின்றன.

அனாபிலஸ் கொசுக்களை கொல் லும் ஒரு பாக்டீரியாவை, 30 ஆண்டு களுக்கு முன் விஞ்ஞானிகள் கண்டறிந் தாலும், அது எப்படி அனாபிலஸ் கொசுவை கொல்கிறது என்பது பிடிபடாமல் இருந்தது.

தற்போது, அந்த பாக்டீரியா உற்பத்தி செய்யும், 'பி.என்.பி.,1' நரம்பியல் நச்சு தான் கொசுவை கொல்கிறது என்பதை, அமெரிக்காவின் கலிபோர் னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சர்ஜீத் கில்லின் குழுவினர் கண்டறிந் துள்ளனர்.

பி.என்.பி.,1 என்ற புரதத்தை வைத்து சோதித்தபோது, அது விலங்குகளுக்கு எந்த தீங்கையும் செய்யவில்லை.

எனவே, இதை அடிப்படையாக வைத்து கொசுவிரட்டியை உருவாக்கி னால், மலேரியா அதிகம் உள்ள நாடுகளில், கொசுக்களை ஒழிக்க முடியும்.

வேதியல் நச்சுக்களை போல அல்லாமல், புரதத்தின் அடிப்படையிலான மருந்தை ஸ்பிரே செய்தால், அது மெல்ல சிதைந்து மறையும்.

வேதிப் பொருட்களை எதிர்க்கும் சக்தியை வளர்த்துக் கொள்ளும் கொசுக்களால், இயற்கையான புரதத்தை எதிர்க்கும் சக்தி வளராது என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...