Monday, July 8, 2019

திருமங்கலம் - செங்கோட்டை 4 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

ராஜபாளையம் _ செங்கோட்டை நான்கு வழிச் சாலையை எதிர்த்து சிவகிரி அருகே  விவசாயிகள் குடும்பத்துடன் விளைநிலங்களில் தேசிய கொடி யேந்தி அறப்போராட்டத்தில் ஈடு பட்டனர்.

திருமங்கலம் - செங்கோட்டை வரையிலான 147 கி.மீ. தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்க மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்து வதற்கான அரசாணை வெளியிடப்பட்டு  அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

குறிப்பாக ராஜபாளையம் சத்திரப்பட்டியிலிருந்து செங் கோட்டை வரையிலான 69 கி.மீ. தொலைவிற்கான பணிகள் துரி தப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு அரசு தேர்ந்தெடுத்துள்ள ராஜபாளையம் அருள்புத்தூர் முதல் இனாம் கோவில்பட்டி,  வடகரை, அச்சன்புதூர், பண் பொழி, செங்கோட்டை வரையிலான வழித்தடம் முப்போகம் விளையும் நன்செய் நிலங்களாகும்.

எனவே மாற்று வழித்தடத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தக் கோரி சிவகிரி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை தாலுகா பகுதிகளைச் சேர்ந்த விவ சாயிகள் பல்வேறு போராட்டங் களை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே கடந்த ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தல் காரண மாக இத்திட்ட பணிகளை மத்திய, மாநில அரசுகள் நிறுத்தி வைத்திருந் தன. அதன்பின் நில உரிமையா ளர்களின் ஆட்சேபனை மனுக் களை பரிசீலித்த அரசு அவர்களது மனுக்கள்  நிராகரிக்கப்பட்டதாகவும், நாட்டின் வளர்ச்சி கருதி 4 வழிச் சாலை அமைக்கப்படும் எனவும் கடந்த வாரம் தாக்கீது அனுப்பியது.
இதையடுத்து இப்பகுதி விவசாயிகள் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக கடந்த 5ஆம் தேதி சிவகிரி தாலுகா அலு வலகத்தில் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதானக் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளி யேறினர்.

இந் நிலையில் நேற்று என்எச்-744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கம் சார்பில் தலைவர் மாடசாமி தலைமையில் பெண்கள், குழந்தைகள், முதிய வர்கள் உள்ளிட்ட 700க்கும் மேற் பட்ட விவசாயிகள் சிவகிரி அருகே உள்ளாறு  கிராமத்தில் இருந்து வடக்கே வெற்றிலை மண்டபம் வரை தேசிய நெடுஞ்சாலையோர விளைநிலங்களில் தேசிய கொடியை ஏந்தியவாறு அறவழிப்போராட்டம் நடத்தினர்.

விவசாயத்தைக் காப்பாற்று, வனவிலங்கு சரணாலயத்தை காப் பாற்று, நீராதாரங்களை காப்பாற்று, 4 வழிச்சாலையை மாற்று வழித் தடத்தில் செயல்படுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகை களை கைகளில் ஏந்தியவாறு மனிதச்சங்கிலி  போராட்டம் போல் ஒரு கி.மீட்டருக்கும் மேலாக வரிசையாக விளை நிலங்களில் நின்று போராடினர்.

இதில் பாதிக்கப்படும் தாலு காக்களிலுள்ள 16 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...