அரசின் அங்கீகாரம் பெறாமல், எந்தவிதமான
கட்டுப்பாடும் இன்றி நாடு முழுவதும் செயல்படும் 23 போலி பல்கலைக்கழங்களின்
பெயர்ப் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் எந்தக் காரணம் கொண்டு படிக்க வேண்டாம் என்று யுஜிசி அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
யுஜிசி அங்கீகாரம் பெறாமல் போலியாகச் செயல்படும் 23 பல்கலைக்கழங்களில் பெரும்பாலானவை ஏற்கெனவே பட்டியலில் இருந்தவைதான்.
இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எதிராக பல்கலைக்கழக மோசடியைத் தடுக்கும் பிரிவு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளது
இந்த 23 பல்கலைக்கழகங்களில் 14
பல்கலை.கள், கடந்த 2005-06 ஆம் ஆண்டு போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில்
இருந்தவை. குறிப்பாக டில்லியில் மட்டும் 4 பல்கலை.கள் செயல்பட்டு
வருகின்றன.
அவை, கமர்ஷியல் யுனிவர்சிட்டி, யுனெட்டெட்
நேஷன்ஸ் யுனிவர்சிட்டி, ஒகேஷனல் யுனிவர்சிட்டி, ஏடிஆர் சென்ட்ரிக்
ஜுரிடிசியல் யுனிவர்சிட்டி ஆகியவை போலியானவை.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7
பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும்
2005ஆம் ஆண்டு பட்டியலில் இருந்து தொடர்ந்து வருகின்றன. அவை, வரணசேயா
சான்ஸ்கிரிட் விஸ்வ வித்யாலயா, காந்தி ஹிந்தி வித்யாபீடம், நேஷனல்
யுனிவர்சிட்டி ஆப் எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி, நேதாஜி சுபாஷ் சந்திர
போஸ் ஓபன் யுனிவர்சிட்டி, உத்தரப் பிரதேஷ் விஸ்வ வித்யாலயா, மகாராணா
பர்தாப் ஷிக்சா நிகேதன் விஸ்வ வித்யாலயா ஆகியவை போலியானவை
மேலும், கருநாடகாவில் உள்ள படகான்வி
சர்கார் வோர்ல்டு ஓபன் யுனிவர்சிட்டி எஜுகேஷன் சொசைட்டி, கேரளாவில்
செயல்படும் செயின்ட் ஜான்ஸ் யுனிவர்சிட்டி, மகாராட்டிராவில் உள்ள ராஜா
அராபிக் யுனிவர்சிட்டி ஆகியவை போலி யானவையாகும்.
இதுதவிர இந்த ஆண்டு புதிதாக போலியான
பல்கலைக்கழகம் உருவாகியுள்ளது. டில்லியில் விஸ்வகர்மா ஓபன் யுனிவர்சிட்டி
ஃபார் செல்ஃப் எம்ப்ளாய்மென்ட் என்ற பல்கலைக்கழகம் யுஜிசி அங்கீகாரம்
பெற்றுள்ளதாகக் கூறி விளம்பரம் செய்துள்ளது. ஆனால், இதுபோலியானது என்று
தெரியவந்துள்ளது.
மேலும், டில்லியில் உள்ள இந்தியன்
இன்ஸ்டிடியூஷன் ஆப் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங் அன்ட் ஆத்யமிக் விஸ்வ
வித்யாலயா, இந்தியன் இன்ஸ்டிடியூஸ்ட் ஆப் அல்டர்நேடிவ் மெடிசன்,
இன்ஸ்டியூட் ஆப் அல்டர்நேடிவ் மெடிசன் அண்ட் ரிசர்ச் (கொல்கத்தா), நவபாரத்
ஷிக்சா பரிசத், நார்த் ஒரிசா யுனிவர்சிட்டி ஆப் அக்ரிகல்ச்சர் அன்ட்
டெக்னாலஜி (ஒடிசா), புதுச்சேரியில் உள்ள சிறீபோதி அகாடெமி ஆப் ஹையர்
எஜூகேஷன், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாரதிய ஷிக்சா பிரசத் ஆகியவை
போலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment