தொழி லாளர் வருங்கால வைப்பு நிதிக் கான சிறப்பு குறைதீர் முகாம், வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
வருங்கால வைப்பு நிதி அம் பத்தூர் மண்டல
அலுவலகம் சார்பில், ஒவ்வொரு மாதமும் வைப்புநிதி உங்கள் அருகில் எனும்
சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப் பட்டு வருகிறது.
இதன் பகுதியாக இந்த மாதத்துக்கான முகாம்
வருகிற ஜூலை 10 ஆம் தேதி, காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும்,
பிற்பகல் 3 முதல் 4 மணி வரையும் நடைபெறுகிறது. இதில் சந்தாதாரர்கள், உறுப்
பினர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, நீண்ட காலமாக
நிலுவையில் உள்ள குறைகளைத் தெரிவிக்கலாம் என வருங்கால வைப்பு நிதி மண்டல
ஆணையர் சைலேந்திர சிங் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு-044 2635 0080, 2635
0120.
முகாம் நடைபெறும் இடங்கள்
1.வருங்கால வைப்பு நிதி நிறுவனம், 3 ஆவது தளம், ஆர்-40 ஏ டி.என்.எச்.பி அலுவலக வளாகம், முகப்பேர் சாலை, முகப்பேர் கிழக்கு
2.அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஏடிசி சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை
3.தொழில்துறை நிறுவனங்களில்
உற்பத்தியாளர்கள் சங்கம் வங்கி கட்டடம், எக்ஸ்போர்ட் ப்ரொமோஷனல்
இண்டஸ்டிரியல் பார்க், பழைய ராணுவ சாலை, சிப்காட் வளாகம்,
கும்மிடிப்பூண்டி
4.பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் பூந்தமல்லி நெடுஞ்சாலை, எட்டிமா நகர், பூந்தமல்லி
5.ஸ்குவிங் ஸ்டெட்டர் எப்-71, எப்-71, சிப்காட் தொழிற்பேட்டை, இருங்காட்டுக்கோட்டை ஸ்ரீபெரும்புதூர்
6.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளூர்.
No comments:
Post a Comment