இதற்காக பசு வதை தடுப்புச் சட்டம்
2004-இல் திருத்தம் கொண்டு வர மத்தியப் பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் அரசு
ஒப்புதல் அளித் துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தபின், பசுக்களைப்
பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சிலர் பசுக்களை விற்பனைக்குக் கொண்டுசெல்லும்
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்கின்றனர். கடந்த ஆண்டில்
இதுபோன்ற சம் பவங்கள் அதிகமாக நடந்தன.
இதைத் தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு
மாவட்டந்தோறும் சிறப்பு காவல்துறை அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க உச்ச
நீதிமன்றம், அனைத்து மாநில அரசு களுக்கும் உத்தரவிட்டது குறிப்பிடத்
தக்கது. இந்நிலையில் மத்தியப் பிரதேச அரசு கொண்டு வரும் சட்டத்
திருத்தத்திற்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதை மாநில
கால்நடைத்துறை அமைச்சர் லகான் சிங் யாதவ் உறுதி செய் துள்ளார்.
ஜூலை 8ஆ-ம் தேதி தொடங்கும் மழைக்கால சட்டப்பேரவைக் கூட் டத் தொடரில் இந்த திருத்தம் கொண்டுவரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சட்டத் திருத்தத்தின் படி,
பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வன்முறையில் ஈடு படுவோர்களுக்கு
குறைந்தபட்சம் 6 மாதம் முதல், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25
ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அப ராதமும் விதிக்கப்படும்.
மேலும், கும்பலாக வன்முறையில் ஈடுபட்டால்
சிறை தண்டனை கூடு தலாக ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டு அதிகபட்சமாக 5 ஆண்டுகள்
சிறை தண்டனை விதிக்கப்படும். தொடர்ந்து இதேபோன்ற வன்முறையில் ஈடு பட்டால்,
தண்டனை இரட்டிப் பாக்கப்படும்.
மேலும், கும்பல் வன்முறையில் ஈடுபடுவோர்
பொதுச் சொத்து களுக்கு சேதம் ஏதும் விளைவித்தால், அவர்களுக்கு ஒரு ஆண்டு
முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் திருத்தம் கொண்டு வரப் பட
உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment