அந்தச் சட்டத்துக்கு ஹாங் காங்கில்
பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர்
இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரீ லாம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கைதிகள் பரிமாற்றச் சட்ட மசோதா ஹாங்காங் சட்டப் பேரவையில் விரைவில் தாக் கல் செய்யப்படும்.
அந்தச் சட்டம் குறித்து தனியார் துறையினர் தெரிவித்த கவலைகளை கருத்தில் கொண்டு, மசோதாவில் சில மாற்றங்க ளைச் செய்துள்ளோம்.
மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள் ளன என்றார் அவர்.
சர்ச்சைக்குரிய அந்த மசோதா மீதான விவாதம்
ஹாங்காங் சட்டப் பேரவையில் புதன் கிழமை மீண்டும் தொடங்கும் எனவும், இந்த
மாதத்துக்குள் அது வாக்கெடுப்புக்கு விடப் படும் என்றும் எதிர்பார்க்கப்
படுவதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
ஹாங்காங்கில் கைது செய் யப்படுபவர்களை
நாடுகடத்து வது தொடர்பான புதிய வரை வுச் சட்டத்தின்படி, சீன பெரு நிலப்
பகுதி உள்பட ஹாங் காங்குடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் செய்துகொள்ளாத
பகுதிகளுக்குக் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களை நாடு கடத்த முடியும்.
இதற்கு, ஹாங்காங் முழு வதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்த சட்டத்துக்கு எதிராக
எதிர்க்கட்சியினர், ஜனநாயக ஆதரவாளர்கள் மட்டுமன்றி, ஹாங்காங்கின் முக்கிய
நீதி அமைப்புகளான சட்டச் சங்க மும், வழக்குரைஞர்கள் மன்ற மும் குரல்
கொடுத்து வரு கின்றன. புதிய சட்டத்தை எதிர்த்து ஹாங்காங்கில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்க ணக்கா னோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டின் ஜனநாயக ஆதரவுப் போராட் டத்துக்குப் பிறகு, ஹாங்காங் கில் நடைபெற்ற மிகப் பெரிய போராட்டமாக அது இருந்தது.
இந்தச் சூழலில், ஹாங்காங் அரசின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment