Sunday, May 19, 2019

பெரியாரின் பெரும்பணிக்கு வணக்கம் சொல்லும் ஈரோடு


இன்று தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் அனைத்து தொலைக்காட்சி ஊட கங்களிலும் நாள்தோறும் அந்த அவலங்களை எடுத்துச் சொல் வதைக் காண்கிறோம்.
ஆட்சியாளர்கள் நீர் மேலாண்மையை அதன் தேவை யை நன்கு உணராமல் சரியான திட்டமிடல் இல்லாமல் குறிப்பாக மழை காலங்களில் தண்ணீரை தேக்குவதற்கு தேவையான தடுப் பணை, நீர்த்தேக்கங்கள் இன்றி வீணாகச்சென்று கடலில் கலக் கின்றது.
1919இல் தந்தை பெரியார் அவர்கள் ஈரோடு நகர்மன்ற தலைவராக இருந்தபோது.... இந்தி யாவில் முதன்முறையாக தண்ணீ ரைகுழாயின் மூலம் வழங்கும் முறையை  அறிமுகம் செய்து வைத்து தமிழகத்தை பெருமைப் பட செய்தவர்.
இதற்கென ஈரோடு வ.உ. சிதம்பரனார் பூங்காவில் 5லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலைத் தொட்டி யைக் கட்டி காவிரி ஆற்றிலிருந்து நீராவி இயந்திர பம்பு செட் மூலம் அந்த தொட்டியில் தேக்கி இரும் புக்குடிநீர்க்குழாயின் மூலமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் தண் ணீர் கொடுத்து தாகம் தீர்த்தார்.
அதனைப்பின்பற்றி சேலத்தில் நகர் மன்ற தலை வராக இருந்த ராஜாஜி சேலத் திலும், பின்னர் சென்னை மாகா ணம் முழுவதும் இந்த திட்டம் நீதிக்கட்சி ஆட்சியில் விரிவு படுத்தப்பட்டது.
தந்தை பெரியாரின் தொலை நோக்கால் உரு வாக்கப்பட்ட குடிநீர் குழாய் திட்டம்...26.05.1919 முதல் இன்றுவரை ஈரோடு மக்களுக்கு பயன்பட்டு வரு கின்றது. 26.05.2019 இதற்கு நூறாண்டு நிறைவு... நினைவு நாள்...பெரியாருக்கு ஈரோட்டு மக்களின்....வணக்கமும்... நன்றியும் .....
குறிப்பு: 1938இல்தான் ஈரோட் டிற்கு மின்சாரம் வந்துள்ளது. அதுவரை நீராவி எஞ்சின் மூல மாக இயக்கப்பட்டிருக்கிறது.
- ஈரோடு.த.சண்முகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...