Saturday, April 6, 2019

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை

1. நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் (MNREGA) 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.
2. ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய், 5 ஆண்டுக்கு 3,60,000 ரூபாய் வழங்கப்படும்.
3. மத்திய அரசிலுள்ள 22 லட்சம்  காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
4. விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் போடப்படும்.
5. தமிழகத்தில் 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்.
6. பள்ளிக்கல்வி, மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்படும்.
தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும், 2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களில் 34 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோம்.
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கென தனி நிதிநிலை அறிக்கை அறிவிக்கப்படும்.
பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.
தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் வன்முறை, கும்பல் கொலை உள்ளிட்ட வெறுப்பு குற்றங்கள் தடுக்கப்படும்.
2023-24 ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத் தியில் 3 சதவீதம் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படும்.
2023 - 24ஆம் ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும்.
மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத வேலைவாய்ப்புகள் ஒதுக்கப்படும்.
காடுகளின் பரப்பளவை அதிகரிக்க சுதந்திரமான சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.
அனைவருக்கும் சமத்துவம், சம வாய்ப்பு, கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் எட்டப் பட்ட ஓர் ஆணையம் அமைத்துக் கண்காணிக்கப்படும். (Equal Opportunities Commission)
இவை போன்ற உயர் அம்சங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையைக் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
இந்தத் தேர்தல் அறிக்கை எத்தகையது - ஈர்ப்பானது என்பதற்கு அளவுகோலை வேறு எங்கும் போய்த் தேடிட வேண்டவே வேண்டாம்.
ஆளும் பிஜேபியின் இரத்தக் கொதிப்பை அதிகரிக்கச் செய்து விட்டதே - அது ஒன்று போதாதா? இந்தத் தேர்தல் அறிக்கை வெளிவந்த தருணம் முதல் பிரதமர் நரேந்திரமோடி வளர்ச்சிபற்றி எல்லாம் பேசாமல், பேச முடியாமல் காங்கிரஸ் சிறுபான்மை மக்களை நம்பியிருக்கிறது - பெரும்பான்மை மக்கள்மீது அதற்கு அக்கறையில்லை என்று மதத்தை முன்னிறுத்தித் தன் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்.
இது அவர்களின் இரத்தவோட்டம் தான் என்றாலும் தேர்தல் நேரத்தில் மதவாதத்தைக் கையில் எடுத்தால், தேர்தல் விதிகளுக்கு முரணானது என்ற சட்டப் பாய்ச்சலுக்குப் பலியாக நேரிடும் என்ற அச்சம் ஒரு பக்கம்.
ஆனாலும் அதையும் தூக்கி எறிந்து மதவாதக் குதிரைமீது சவாரி செய்ய இந்த விராதி வீரர் புறப்பட்டு விட்டார்.
17ஆம் மக்களவைத் தேர்தல் தொடங்கப்பட இடையில் சில நாட்களே உள்ள நிலையில் இதுவரை பிஜேபி தன் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை.
ஒருக்கால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளி வரட்டும், அதைப் பார்த்தபின், 'கவர்ச்சிகரமாக' எதையாவது வெளியிடலாம் என்று காத்துக் கொண்டிருக்கக் கூடும். ஒன்று மட்டும் உண்மை. நரேந்திரமோடியோ, பிஜேபியோ கொடுக்கும் உறுதிகள் எல்லாம் வெத்து வேட்டுதான். எந்த காலத்திலும் செயல்படுத்தும் எண்ணம் அவர்களுக்குக் கிடையாது என்பதைக் கடந்த அய்ந்தாண்டுகளில் நாட்டுமக்கள் அனுபவத்தின் வாயிலாகவே அறிந்து கொண்டு விட்டார்கள்.
காங்கிரசைப் பொறுத்தமட்டில் சொன்னதை செய்வார்கள் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் உண்டு. அண்மையில் காங்கிரஸ் வெற்றி பெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தானில், தேர்தல் வாக்குறுதிகளைக் காங்கிரஸ் குறுகிய காலத்திலேயே நிறைவேற்றி விட்டதே.
தமிழ்நாட்டில் திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் இந்திய அளவில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் கதாநாயகனே!
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் வெற்றி, அதில் உள்ள கட்சிகளுக்காக அல்லவே அல்ல - பாசிச மதவெறி சக்தியை வீழ்த்தி சமத்துவ சமநிலையை உருவாக்கவே! - நாட்டு நலனுக்காகவே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...