Thursday, April 11, 2019

மோடி குறித்து பேசினாலே தேசவிரோத செயலா? 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' தலையங்கம்

ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்ட மணிப்பூர் ஊடகவியலாளரை 5 மாதங்களுக்குப் பிறகு தேசவிரோத வழக்கை ரத்து செய்து விடுதலை செய்தது மணிப்பூர் நீதிமன்றம்.
பா.ஜ.க. ஆளும் மாநிலமான மணிப்பூரின் இம்பாலைச் சேர்ந்தவர் கிஷோர்சந்திரா வாங்கேம். இவர் அய்.எஸ்.  தொலைக்காட்சி இணைய ஒளிபரப்பில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி ஜான்சிராணியின் பிறந்ததின விழாவில் முதல்வர் பிரென் சிங் மணிப்பூரின் விடுதலை இயக்கத்தையும், ஜான்சிராணியையும் ஒப்புமைப்படுத்திப் பேசினார்.
ஜான்சிராணிக்கும் மணிப்பூர் விடுதலை இயக்கத்திற்கும் எந்தவிதத்திலும் தொடர்புமில்லை என்று கொந்தளித்த கிஷோர்சந்திரா, முதல்வர் பிரென் சிங்கின் பேச்சைக் கண்டித்ததோடு, அவர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.இன் கைப்பாவை என்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொலி பதிவில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதையடுத்து, கிஷோர்சந்திராவை மணிப்பூர் காவல்துறை நவ.21ஆம் தேதி கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்த உள்ளூர் நீதிமன்ற நீதிபதி அவருக்கு உடனடியாக பிணை வழங்கி உத்தரவிட்டார். அடுத்த 24 மணிநேரத்தில் சாதாரண உடையில்  வந்த காவல்துறையினர் கிஷோர்சந்திராவை காவல்நிலையம். அழைத்துச் சென்று ஒருவாரம் அவரை இரகசிய இடத்தில் அடைத்து வைத்தனர். பிறகு நவ.29 அன்று வன்முறையைத் தூண்டும்விதமாகப் பேசியதால் தேசப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கிஷோர்சந்திராவை மத்திய சிறையில் அடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டிருந்த கிஷோர் சந்திரா பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவர் வெளியிட்ட காணொலி தேசவிரோத சக்திகளை ஊக்குவிப்பதாக உள்ளது என்று மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பு சட்ட ஆலோசனைக் குழு, இந்த விவகாரத்தில் கிஷோர் சந்திராவுக்கு சிறைத் தண்டனை விதிக்கலாம் எனவும் பரிந்துரைத்திருந்தது. இந்தப் பரிந்துரையை மாநில ஆளுநர் நஜ்மா அப்துல்லா ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து கிஷோர் சந்திராவிற்கு 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னதாக கிஷோர்சந்திராவின் மனைவி ரஞ்சிதா பேசுகையில், "என் கணவர் ஒன்றும் தீவிரவாதி கிடையாது. முதல்வரை நோக்கி கேள்வியெழுப்பவும், அரசியல் கட்சிகளை விமர்சிக்கவும் உரிமை தந்துள்ள ஜனநாயக மண்ணில் தன் கருத்தைப் பதிவுசெய்தது தவறாகாது எனக் கூறியிருந்தார்.  மத்திய அரசிடம் முறையிட்டும் அவரது குரலுக்கு யாரும் செவி மடுக்கவில்லை என்று கூறினார். இந்த நிலையில் கிசோர் சந்திராவின் மனைவி தனது கணவனுக்குப் பிணை வேண்டி மணிப்பூர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஊடகவியலாளருக்கு எதிராக அரசு போட்ட தேசவிரோத வழக்கை ரத்து செய்தனர், மேலும் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியிருப்பதாவது, உள்ளூர் நீதிபதி ஊடகவியலாளரை தேசப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது சட்டவிரோதம் என்று கூறி பிணையில் விடுவித்த போதும் வேண்டுமென்றே ஆளுநர் அனுமதியைப் பெற்று தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது ஜனநாயகவிரோதமான செயல் என்று கூறியுள்ளனர்.
விடுலையான கிஷோர் சந்திரா தான் அரசின் நடவடிக்கைக்குப் பயப்படப் போவதில்லை. என்றும், என்னுடைய ஜனநாயக ரீதியிலான போராட்டம் மக்கள் விரோத அரசுக்கு எதிராக தொடரும் என்றும் கூறினார்.
- 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' தலையங்கம் 10.4.2019

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...