மோடியின் வாழ்க்கை குறித்த திரைப்படம்
இன்று வெளியாக இருந்தது. தேர்தல் முடியும் வரை பிரதமர் மோடியின்
வாழ்க்கையைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம்
தடை விதித்திருக்கிறது. இன்று இந்தத் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில்,
தேர்தல் ஆணையத்தின் முடிவு பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர்
மோடியின் வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்பட மாக எடுக்கப்பட்டுள்ளது.
இதில் விவேக் ஓபராய் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சந்தீப் சிங் என் பவர் தயாரிக்க, படத்தை
ஓமங் குமார் என்பவர் இயக்கி இருக் கிறார். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில்
இருந்து, மோடியின் படம் தொடர்பான சர்ச்சைகள் வெடித்து வந்தன. மோடியின்
படம் திரையிடப்பட்டால், அது வாக்காளர்களை திசை திருப்பும் வகையில்
அமையும் என்று கூறி, காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
தெரிவித்து வந்தன. இதன்பின்னர் மோடி திரைப் படத்தை தேர்தல் முடியும் வரை
வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம்
புகார் அளித்தது. இந்த நிலையில், தேர்தல் முடியும் வரையில் மோடியின்
திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து அறிவிப்பு
வெளியிட்டிருக்கிறது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம்
வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தாவது-: தேர்தல் நடத்தை விதிகள்
நடைமுறையில் இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அரசி யல் கட்சி அல்லது
தலைவரின் வாழ்க்கை வரலாறு படமாக வெளி வருவது வாக்காளர்களின் மனநிலையை
மாற்றும். இதனை மின்னணு ஊடகங்களில் வெளியிடக் கூடாது. இவ்வாறு தேர் தல்
ஆணையம் கூறியுள்ளளது.
நேற்று காங்கிரஸ் தரப்பில் மோடி
திரைப்படம் வெளியிட தடை செய்யக்கோரி தொடரப் பட்ட வழக்கை உச்ச நீதிமன் றம்
ரத்து செய்தது. இந்த விவ காரம் தொடர்பாக பலமுறை நேரம் வீணடிக்கப்பட்டு
விட்ட தாக உச்ச நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திரை வாய்ப்பு
இல்லாத நடிகரும், தயாரிப்பாளரும் திறமையற்ற ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை
படமாக எடுத்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்திருக்கிறது.
No comments:
Post a Comment