Wednesday, April 10, 2019

தனியார் கைக்குத் தாரை வார்க்கப்படும் பி.எஸ்.என்.எல். அரசு நிறுவனம்



பிஎஸ்என்எல் நிறுவனம் 54 ஆயிரம் பணியாளர்களை நீக்க அனுமதி அளித்துள்ளது. மேலும், நிறுவனத்தை மூடும் வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 7,993 கோடி ரூபாய் நட்டத்தைச் சந்தித்தது. மேலும், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்த நிலையில், தற்போது 54-ஆயிரம் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க பிஎஸ்என்எல் நிறுவனம் அனுமதி அளித்துள்ளதுஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கவும் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக 10 முக்கிய  நட வடிக்கைகளுக்கு பிஎஸ்என்எல் ஒப்புதல் வழங் கியுள்ளது. அதில், பணியாளர்கள் நீக்கத்தையும், விருப்ப ஓய்வு பெறும் வயதை 50 ஆக குறைப்பதும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பிஎஸ் என்எல்லின் இந்த நடவடிக்கையால், அங்கு பணியாற்றும் 52 சதவீதம் பேர் வேலையை இழக்க வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே, கடந்த 12 ஆண்டுகளாக பிஎஸ்என்எல் தனது ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. இதே போல், தினக்கூலி அடிப்படையில் வேலை பார்ப்பவர்களுக்கும் சம்பளம் தராமல் சமாளித்து வருகிறது. பெரும் சர்ச்சை பேராட்டங்களுக்குப் பிறகே தினக்கூலி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்தத் தொடர் நடவடிக்கைகளும், சீர்திருத்த முடிவுகளும் விரைவில் மூடு விழாவுக்கான துவக்கமாகவே பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக மார்ச் மாதம் சென்னையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் "இது எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி, பிஎஸ்என்எல் மூடப்படாது, அதை சீர்திருத்த மோடி சிறந்த நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறார்" என்று  கூறி இருந்தார். இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பிஎஸ்என்எல். நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர். ஏற்கெனவே பிஎஸ்என்எல் டவர்களில் முக்கால் பாகம் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
மோடி பிரதமராக அமர்ந்த காலம் முதல் மத்திய அரசு பொதுத் துறைகளை ஒழித்துத் தனியார் நிறுவனங்களை, கார்ப்பரேட்டுகளை ஊட்டி  வளர்க்கும் வேலையிலேயே - திசையிலேயே செயல்பட்டு வருகிறது.
இது கார்ப்பரேட்டுகள் - சாமியார்களின் ஆட்சி என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது. இது ஏதோ அரசியல் நோக்கமுடையது அல்ல - என்பதற்கு மோடி அரசின் அன்றாட நடடிக் கைகளே கட்டியம் கூறுகின்றன.
மத்திய அமைச்சராக மானமிகு மாண்புமிகு . இராசா இருந்தபோது இந்தத் துறை மக்களுக்குப் பெரும் அளவில் பயன்படும் - இலாபம் தரும் அரசுத் துறை நிறுவனமாக நடந்து வரவில்லையா? அதனைப் பொறுக்காமல் அவர் மீது வீண் பழி சுமத்தி, அமைச்சர் பொறுப்பிலிருந்து அவர் விலகும் நிலைக்குத் தள்ளப்படுவதற்குக் காரணமான சக்திகளை முச்சந்தியில் நிறுத்தி இப்பொழுது 'சாட்டையடி' கொடுக்க வேண்டாமா?
. இராசா பலி கடா ஆக்கப்பட்டாலும், அவர் குற்றமற்ற பொது நலத் தொண்டர் என்று பிரகாச மாக வெளியில் வந்தாரே 'தகுதி  - திறமை யோடு பிறந்தவர்கள்' (?) கையில் ஆட்சியிருக்கும் நிலை யில் அந்த நிறுவனமே ஊற்றி மூடப்படுகிறது - தனியார்க் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கும் சூழ்ச்சியும் இதன் பின்னணியில் உள்ளது. பொதுத் துறையை வீழ்த்தி தனியார்த் துறையைப் பல படுத்தும் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் வரலாமா?
வாக்காளர்களே சிந்திப்பீர்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...