சென்னை, ஏப். 8- 2014இ-ல், நான் ஆட்சிக்கு வந் தால், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை தருவேன் என்ற உறுதிமொழி கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் நரேந்திர மோடி.
தற்போது அய்ந்தாண்டுகள் கழித்து, என்ன நிலைமை?
ஒட்டு மொத்த வேலைவாய்ப்பு 40% குறைந்து உள்ளது. இதில் கிராமப்புற ஆண்கள் 7.3%, பெண்கள் 3.3%.
ஒட்டுமொத்தமாக 4.7 கோடி பேர் வேலை இழந் துள்ளனர். இதில் கிராமத்தில் உள்ளோர் 4.3 கோடி பேர். நகரத்தில் 40 லட்சம் பேர்.
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வேலைவாய்ப்பின்மை 6.1% விழுக்காடாக உயர்ந் துள்ளது. இதில் 15 வயதில் இருந்து 29 வயதுக்குள் உள்ள படித்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நகரத்தைப் பொறுத்தவரை வேலையின்றி தவிக்கும் ஆண்கள் 18.7%, பெண்கள் 27.2% ஆகும். இதே போல், கிராமத்தில், ஆண்கள் 17.4%, பெண்கள் 13.6% வேலை கிடைக்காமல் உள்ளனர்.
மொத்த உழைக்கும் தொழிலாளர்கள் எண் ணிக்கை 2011-12-ல் 42 கோடியாக இருந்தது, தற் போதைய மோடியின் பொன்னான? ஆட்சியில் 2017-18-ல் 37.3 கோடியாக குறைந்துள்ளது.
இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் மத்திய அரசின் கீழ் செயல்படும் புள்ளியியல் துறையின் தேசிய மாதிரி ஆய்வுக் கழகம் (NSSO) தொகுத் தது. ஆனால், மோடி அரசு, இந்த விவரங்களை வெளியிடாமல் தடுத்த நிலையில், இதன் பொறுப்புத் தலைவராக இருந்த பி.சி.மோகனன் மற்றும் உறுப் பினர் மீனாட்சி ஆகிய இருவரும் எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகினர்.
இருப்பினும், மோடி ஆட்சியில் வேலைவாய்ப் பின்மை குறித்த விவரங்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்து, மோடி அரசின் அய்ந்தாண்டு கால நிலையை தோலுரித்து காட்டி விட்டது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, தற்போதைய அதிமுக ஆட்சியில், வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.8%. இது இந்தியாவின் ஒட்டு மொத்த விகிதமான 3.7 விழுக்காட்டை விட அதிகமாக ஆகி உள்ளது.
நாட்டின் மக்கள் தொகையில் 35 வயதுக்குட் பட்டவர்கள் 65 விழுக்காடு உள்ள நிலையில், முதன் முறையாக தேர்தலில் வாக்களிக்க இருக்கும் 21 வயது நிரம்பிய இளைஞர்கள், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவது உறுதி.
-கோ.கருணாநிதி
No comments:
Post a Comment