மும்பை, ஜூலை 16 அம்பானியின் கனவில் ஒருபல்கலைக்கழகம்உருவாக்கினால்எப்படி இருக்கும் என்ற நினைப்பு வர அதை அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். இதனை அடுத்து அவரது கனவில் மட்டும் இருக்கும் பல் கலைக்கழகத்திற்கு பன்னாட்டு கல்வி அமைப்புத் தகுதிவழங்கி அதற்காக ரூபாய் ஆயிரம் கோடி யையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் மக் களை மேலும் முட்டாள் ஆக்கும் வகையில் ரிலையன்ஸ்நிறுவனம் தொடங்கப்படாத அந்தப் பல்கலைக் கழகத்திற்குத் வேந்தர், துணை வேந்தரை நியமித்துள்ளது.
அடிக்கல்கூட நாட்டப்படாத...
இந்தியாவில் இருக்கும் தலைசிறந்த பத்து தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் பட்டியலில், இன்னும் அடிக்கல்கூட நாட்டப் படாத ஜியோ பல்கலைக்கழகத்தின் பெயரும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த மோசமான செயலைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் எதிர்ப் பினையும், விமர்சனங்களையும் வைத்துள்ளன.
வேந்தர் மற்றும் துணை வேந்தர் நியமனம்
முகேஷ் அம்பானியின் கனவில் மட்டுமே இருக்கும் இந்த ஜியோ பல்கலைக் கழகத்திற்கு, மத்திய அரசின் தேசிய ஆராய்ச்சி மய்யத்தின் பேராசிரியராக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கீழ் 2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆர்.ஏ.மஷேல்கரை ஜியோ பல்கலைக் கழகத்தின் வேந்தராக நியமித்திருக்கிறார்கள். தற்போது அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் இயங்கி வரும் நேசனல் இன்னொவேஷன் ஃபவுண்டேசனின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
துணைவேந்தராக ரிலையன்ஸ் இன்னொ வேஷன் கவுன்சிலில் இருந்த தீபக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாங்காக்கில் இருந்த சாசின் கல்வி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு தகுதியைப் பெறும் ஜியோ பல்கலைக்கழகம்
உலகத்தரம் வாய்ந்த இந்தியாவின் 20 கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து, அதன் படிநிலைகளை உயர்த்துதல் தொடர்பாக சிறப்பு தகுதியினை அறிவித்தது மத்திய அரசு. இந்த பட்டியலை தயாரிக்க எம்பவர்ட் எக்ஸ்பெர்ட் கமிட்டி உருவாக்கப்பட்டது.
பெங்களூருவில் இருக்கும் இந்திய அறிவியல் கழகம், மும்பை இந்திய தொழில் நுட்பக் கழகம், டில்லி இந்திய தொழில் நுட்பக் கழகம் போன்ற அரசு கல்வி நிலையங்களையும், பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்கல்வி அகடாமி மற்றும் ஜியோ பல்கலைக்கழகம் போன்ற தனியார் நிறு வனங்களின் பெயர்களையும் பட்டியலில் வெளி யிட்டார் கமிட்டித் தலைவர் கோபாலசாமி.
இதைப்பற்றி கேள்வி எழுப்பும்போது, ஜியோ அளித்த விண்ணப்பத்தில் இருக்கும் சில முக்கியத் திட்டங்கள் எங்கள் வரையறைக்குள் வந்த காரணத்தால்தான் இதன் பெயரை இணைத் துக் கொண்டோம்'' என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பதில் கூறியது.
ஜியோ கற்பனை பல்கலைக்கழகம் பத்து தனித்துறைகளின்கீழ் சுமார் 50 பாடப் பிரிவுகளை கற்றுத் தர இருக்கிறது. அறிவியல், கலை, தொழில்நுட்பம், மருத்துவம், வடிவமைப்புத் துறைபோன்றபல்வேறுகல்விகளைகற்றுத் தருவதற்காக உலகில் இருக்கும் 500 உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து துறைசார் வல் லுநர்களை கொண்டு வர இருக்கிறது ஜியோ. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அனைத்துவிதமான வசதிகளும் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே நிறுவப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பல்கலைக்கழகம் எங்கு அமைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக ரிலையன்ஸ் நிறுவனம் இன்னும் அறிவிக்க வில்லை. இருப்பினும் சிலர் மும்பைக்கு அருகில் உள்ள கர்ஜத் என்ற இடத்தில் அமையும் என்கிறார்கள். சிலர் ரிலையன்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய திருபாய் அம்பானிக்குப் பிடித்த நகரமான ராஜ்கோட்டில் உருவாகும் என் கிறார்கள். மார்ச் மாதம் உத்தரப்பிரதேசத்தில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலின் போது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் ரிலையன்ஸ் பல்கலைக்கழகம் உ.பி.யில் துவங்க உள்ளதாக கூறியிருந்தார். இப்படி குழப் பமான சூழலில் உருவாக்கப்படாத பல்கலைக் கழகத்திற்கு வேந்தர், துணைவேந்தரை நியமித் துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
No comments:
Post a Comment