Friday, April 27, 2018

மம்தாவின் அறைகூவல்!

பசுவை இந்துக்கள் புனிதமாகக் கருதுகின்றனர். பன்றியின் இறைச்சியை முஸ்லிம்கள் வெறுக் கின்றனர். இதை நன்கு தெரிந்து வைத்துள்ள பா.ஜ.க.காரர்கள் இந்துக்களின் கோவிலில் பசு இறைச்சியையும், முஸ்லிம் களின் மசூதியில் பன்றி இறைச்சியையும் வீசி மதக் கலவரத்திற்கு வித்திடுகின்றனர்.
இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இந்த ஈனச் செயலை அவ்வப்போது நடத்தி வந்த பா.ஜ.க.காரர்கள் மேற்கு வங்கத்தில் இதை அதிகப்படுத்தியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் இறைச்சியைத் தூக்கி வீசுவதின் மூலம் மதக் கலவரத்தைத் தூண்டி விட பா.ஜ.க.வும் - ஆர்.எஸ்.எஸ்.சும் முயற்சிக்கின்றன.
இதுபோன்ற விஷமச் செயல்களில் ஈடுபடு வோரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 1000 ரூபாய் பரிசு அல்லது வேலை வாய்ப்பு வழங்கப்படும். மக்களை மத அடிப்படையில் பிரித்து மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க லாம் என பா.ஜ.க. நினைக்கிறது.
மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சித்தால், நான் டில்லி செங்கோட்டையைக் குறி வைப்பேன்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ‘டில்லி சலோ’ என்று முழங்கியது போல நாங்கள் டில்லிக்குச் சென்று மத்திய ஆட்சியைக் கைப்பற்றுவோம்.
விரைவில் வரவுள்ள ராமநவமி விழாவின் போது மதக் கலவரத்தைத் தூண்ட பா.ஜ.க. முயற்சிக்கும். பா.ஜ.க.வின் இந்த முயற்சியை போலீசாரும், பொது மக்களும் ஒன்று சேர்ந்து விழிப்புடன் இருந்து  முறியடிக்க வேண்டும்” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
மத அரசியலை நடத்துவது என்று முடிவு செய்து விட்ட பிறகு இந்தளவுக்குப் பார்ப்பன சக்திகள் இத்தகு கீழ்த்தர வேலைகளில் இறங்கத்தான் செய்வார்கள்.
1857ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் என்பார்கள். அதனை தந்தை பெரியார் ஏற்றுக் கொள்ளவில்லை. இராணுவத்தினரின் துப்பாக்கிகளில் பசுவின் கொழுப்பு பூசப்படுகிறது என்று இந்து சிப்பாய்களிடமும், பன்றிக் கொழுப்பு பூசப்பட்டிருக்கிறது என்று முசுலிம் சிப்பாய்களிடமும் பிரச்சாரம் செய்யப்பட்டது. அது மதக்கலவரமாக உருவெடுத்தது.
அதனைத் தொடர்ந்துதான் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தியாவின் மத விவகாரங்களில் பிரிட்டன் தலை யிடாது என்று பிரகடனம் செய்யப்பட்டது. விக்டோரியா மகாராணியின் பிரகடனம் என்று வரலாற்றில் இது இடம் பிடித்து விட்டது.
இப்பொழுது பிஜேபியும், ஆர்.எஸ்.எஸ்சும், சங் பரிவார்களும் என்ன செய்து கொண்டுள்ளன? மாட்டுக் கறி சாப்பிடக்கூடாது என்று மாநிலங்களின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பிஜேபி அரசு சட்டமே போட்டுள்ளது.
லாரிகளில் மாடுகளை ஏற்றிக் கொண்டு சந்தைக்குச் சென்றால் இடையில் மடக்கி, ஏற்றிச் செல்லுபவர்களை அடித்துக் கொல்லுவதும், வீட்டுக்குள் ஃபிரிஜ்ஜில் இருப்பது பசு மாட்டுக்கறி என்று அபாண்டமாகக் கூறி வீட்டுப் பெரியவரை அடித்துக் கொல்லுவதும் அசல் காட்டு மிராண்டித்தனம் அல்லவா?
இந்துராஜ்யம், ராமராஜ்யம் அமைக்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் அதன் அம்சங்களை இப்பொழுதே செயல்படுத்தத் தொடங்கி விட்டார்கள் என்றுதான் கருத வேண்டும்.
குடிமக்களுக்கு மூன்று வேளை உணவைக் கொடுக்க வக்கில்லாத இந்தக்கூட்டம் மக்களின் தனி மனித உணவுப் பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பது வெட்கக்கேடே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...