இலங்கையில் வடகிழக்கு ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதல் முடிந்த கையோடு இசுலாமி யர்கள் மீதான தங்கள் வன்மத்தை சிங்களர்கள் திருப்பியுள்ளார்கள்.
எத்தனை அரசுகள் மாறினாலும், பேச்சு வார்த்தை நடத்தினாலும் இனவாத/மதவாத பிரச் சினை மட்டும் அந்த நாட்டில் தீராமல் தொடர்ந்து வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மதமாற்ற பிரச்சினை உருவாகி இருக்கிறது என் றும், இசுலாமிய மக்கள், அங்கு இருக்கும் புத்தமத மக்களை மதம் மாற்றுவதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் புத்த விகாரங்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரிப்பதாகவும், அதில் மசூதிகள் கட்டுவதாகவும் பிரச்சினை எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இசுலாமிய கட்டடங்கள், மசூதிகள் மீது கடந்த 27ஆம் தேதி தாக்குதல் நடத்தினார்கள். கண்டி பகுதியில் இசுலாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் இந்தத் தாக்குதல் பெரிய அளவில் நடந்து இருக்கிறது.
இதில் பலர் மோசமாக காயம் அடைந் தார்கள். இந்த கலவரத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயம் காரண மாக உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த கலவரத்தைத் தொடங்கியது புத்த மத சிங் களர்கள்தான் என்று இசுலாமியர்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். இக்கலவரத்தில் இசுலா மியர்களுக்குச் சொந்தமான 75 கடைகள் கொளுத்தப்பட்டு இருக்கின்றன. 32 வீடுகள் எரிக் கப்பட்டுள்ளன.
அதேபோல் 10 மசூதிகள் இடிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் இருக்கின்றன. இதையடுத்து கலவரம் பெரிதாகி இருக்கிறது. அங்கு கலவரம் நிற்காத காரணத்தால் தொடர்ந்து 10 நாள்களாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் கலவரம் தொடர்கிறது. இதில் கைது செய்யப்பட்ட புத்த துறவிகளை விடுதலை செய்ய சொல்லி சக துறவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையினை சமாளிக்க முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது
வன்முறை பரவாமல் இருக்க நாடு முழுவதும் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. வன் முறைகள் அதிகம் நிகழ்ந்த கண்டி மாவட்டத்தில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை முழுவதும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து சமூக வலை தளங்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. நிலைமை சீராகும் வரை இணையதள சேவைகள் கண்டியில் இருக்காது என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
ராஜபக்சே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று வரும் ஒரு சூழ்நிலையில் சிங்களவர் களுக்குப் புதிய கொம்பு முளைத்திருக்கக் கூடும்.
முதலில் முசுலிம் அல்லாத தமிழர்கள் அழிக்கப்பட்டனர் என்றால், அடுத்த குறியீடு இசு லாமியர்களா? எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல; அவர்கள் தமிழர்களா இல்லையா என்பதுதான் அவர்களின் கணக்கு.
அன்றைக்குத் தமிழர்கள் தாக்கப்பட்டபோது இவர்கள் எப்படி இருந்தார்கள் என்பது போன்ற சிந்தனைகள் தேவையில்லை. இந்த உணர்வு ஒட்டு மொத்த தமிழின மக்களையும் ஒழித்து முடித்து விடும்.
ஏற்கெனவே தமிழர்கள் படுகொலை காரண மாக மனித உரிமை ஆணையத்தின் முன் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது இலங்கை அரசு.
மேலும் ஒரு குற்றச்சாட்டுக்காகத் தலைகுனியும் நிலையைத் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம். மதம் யானைக்குப் பிடிக்கட்டும், மனிதனுக்கு வேண்டாமே!
No comments:
Post a Comment