உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை அந்த வகுப்பாசிரியர், மிகவும் மோசமான சொற்களால் திட்டி 'நீங்கள் (இஸ்லாமியர்கள்) அனைவரும் தீவிரவாதிகள்' என்று கூறி அந்த மாணவனின் புத்தகப் பையை தினசரி சோதனை செய்து 'இன்று வெடிகுண்டு எதுவும் கொண்டு வரவில்லையா?' என்று கேட்டு கேலி செய்வாராம். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு தேர்வில் அந்த மாணவர் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதனைப் பார்த்த ஆசிரியர், 'நீ நன்றாகப் படித்து அப்துல் கலாம் போல் வரமுடியாது, வேண்டுமென்றால் ஒசாமா பின்லேடன் போல் தீவிரவாதியாக மாறலாம்' என்று கூறி இனி இந்த மாணவனுடன் மற்ற மாணவர்கள் சேரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்த இஸ்லாமிய மாணவர் வீட்டிற்கு வந்து, சாமியார் முதல் அமைச்சர் ஆதியத்நாத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் "நான் நன்றாகப் படித்து அப்துல்கலாம் போன்று விஞ்ஞானியாக வர வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் எனது வகுப்பாசிரியரோ என்னை தீவிரவாதி" என்று கூறுகிறார். மேலும் எனது புத்தகப் பையை தினசரி சோதனை செய்கிறார். சக மாணவர்களை என்னுடன் பேசக்கூடாது என்றும், என்னுடன் பழகினால் உங்களை அய்.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு அனுப்பிவிடுவான் என்றும் கூறி வருகிறார். ஆசிரியர் என்னை அழைக்கும் போது தீவிரவாதி என்று அழைக்கிறார். நான் தீவிரவாதியில்லை, ஆசிரியர் மனதளவில் என்னை மிகவும் துன்புறுத்துகிறார்" என்று எழுதி வைத்து விட்டு தனது தாத்தா பயன்படுத்தும் தூக்கமாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரது தந்தை அந்தப்பகுதியில் ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டுவருகிறார்.
இந்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற அந்த மாணவரை வீட்டார், மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து அவரது தந்தையார் கான்பூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் கான்பூர் காவல்நிலைய அதிகாரிகள் பள்ளி ஆசிரியர் மீது கூறும் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்.
பாரதீய ஜனதாவும், சங்பரிவாரும் நாட்டில் எத்தகைய சூழலை உருவாக்கிக் கொண்டு வருகின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!
கடவுள், மத நம்பிக்கை என்பதெல்லாம் தனி மனிதனுடைய முடிவைப் பொறுத்தது. அதில் அரசு தலையிடுவது என்பது அத்துமீறிய செயல் - அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல்!
பிஞ்சு உள்ளங்களில் நஞ்சேற்றும் நாசகார சக்தி ஒன்று இந்தியாவில் வளர்ந்து வருகிறது - அதன் கையில் அதிகார சாட்டையும் கிடைத்து விட்டது.
அதன் கோர விளைவு எத்தகையது என்பது கான்பூர் முசுலிம் மாணவன் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததன் மூலம் அறிய முடிகிறது. விழிப்புணர்வுடன் மக்கள் சக்தி கிளர்ந்தெழா விட்டால், அழிவை யாராலும் தடுக்கவே முடியாது.

No comments:
Post a Comment