Wednesday, November 8, 2017

மாநிலத்திற்கொரு மாட்டிறைச்சி கொள்கையா?

பழங்குடியினர் அதிகம் வாழும் வடகிழக்கு மாநிலங்களின் முக்கிய உணவு மாட்டிறைச்சி, ஆகவே அடுத்த ஆண்டு மேகாலயா சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு மேகாலயாவில் மாட்டிறைச்சியைத் தடைசெய்யமாட்டோம் என்று பாஜக கூறியுள்ளது.

மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலத் தேர்தல் 2018-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது, இதில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவிலும் தேர்தல் நடைபெறவிருக்கிறது, பாஜகவினர் அஸ்ஸாமில் ஆட்சி அமைத்துள்ளனர். மணிப்பூரில் பெரும்பான்மை இல்லாமல் இருப்பினும் சுயேட்சை வேட் பாளர்களை விலைக்கு வாங்கி அங்கும் ஆட்சியில் அமர்ந்துவிட்டது, இந்த நிலையில் மேகாலயாவில் பெரும்பான்மை ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற வெறியில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் முக்கிய உணவான மாட்டிறைச்சி விவகாரத்தில் பாஜக தடைவிதிக்கப் போகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த மேகாலயா மாநில பாஜக துணைத் தலைவர் லிங்டோ,  இச்சட்டத்தில் மாட்டு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. நேபாளத் தில் நடக்கும் காளித் திருவிழாவுக்கு அதிக அளவு மாடுகள் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப் படுகின்றன. இதை தடைசெய்யும் நோக்கத்தின் அடிப்படையில் மாடுகள் கடத்தல் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவு கால்நடை இறைச்சிக் கூடங்கள், கால் நடை சந்தைகளை நெறிமுறைப் படுத்துவதற்கு மட்டுமே. அந்த சட்டத்தில் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கவில்லை. அவ்வாறு செய்தால் அது அரசியலமைப்புச் சட்டத்தின்படி உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்திற்கு எதிரானதாகும்" என்று புது விளக்கம் கொடுத் துள்ளார்.

மேகாலயா முதல்வர் முகுல் சங்மா சமீபத்தில் டில்லி சென்றார். அப்போது அவர் மாடுகளை இறைச்சிக்காக கொண்டுசெல்ல மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட தடை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தார். வாழ்வாதார விஷயத்திலும், மக்களின் கலாச்சார உணர்வுகளையும் இது மீறும் செயலாகும். மாநில மலைவாழ் மக்களின் உணவுப் பழக்க வழக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்று லிங்டோ தெரிவித்தார்.

கடந்த ஜூன் 12ஆம் தேதி மாநில சட்டப் பேரவையில் மத்திய அரசின் மாட்டு இறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில்  சங்மா பேசுகையில், கால்நடை இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதன் மூலம் மாநிலத்தில் உள்ள 5.7 லட்சம் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேகாலயாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

பிஜேபியைப் பொறுத்தவரையில் அரசியல் நடத்துவதற்கு கைவசம் எந்த சரக்கும் இல்லை. முந்தைய அய்க்கிய முற்போக்கு ஆட்சி அறிவித்த பல்வேறு திட்டங்களைப் பெயர் மாற்றி தங்கள் திட்டங்கள் போல அறிவித்து வருகிறார்கள். இதை நாடாளுமன்றத்திலேயேகூட காங்கிரஸ் உறுப்பினர்கள் முகத்துக்கு முகம் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் பசுவைக் கடவுள் என்று சொல்லி மக்களின் மத விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சிலம்பம் ஆடி வருகின்றனர்.

அதிலும்கூட மாநிலத்துக்கு ஒரு  நியதி. வடகிழக்கு மாநிலங்களில், மாட்டிறைச்சி முக்கிய உணவு. அங்கு போய் தங்கள் மாட்டு அரசியலை நடத்த முடியாத நிலையில், அந்தர் பல்டி அடிக்கிறார்கள். கோவாவில் மாட்டிறைச்சியைப் பற்றி அவர்களால் வாய் திறக்கவே முடியாது.

பிஜேபிக்குச் சரிவு காலம், இலையுதிர் காலம் தொடங்கி விட்டது - தொடங்கியே விட்டது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...