சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் அளித்த பேட்டி
சென்னை, நவ.8- பெரியார் பேருரையாளர் நன்னன் அவர்கள் மறையவில்லை; கொள் கையாக என்றைக்கும் நிறைந்திருக்கிறார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.
பெரியார் பேருரையாளர் டாக்டர் மா. நன்னன்
அவர்கள் மறைந்ததையொட்டி (7.11.2017) சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவருடைய
இல்லத்திற்குச் சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்திய திராவிடர் கழகத்
தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப்
பேட்டி அளித்தார்.
தமிழர் தலைவர் அவர்களின் பேட்டி யின் விவரம் வருமாறு:
துன்பத்திற்கும், துயரத்திற்கும் உரிய சோக நிகழ்ச்சி
பெரியார் பேருரையாளர் பெரும் புல வர்
நன்னன் அவர்கள் தமிழகத்தில் மட்டு மல்ல, தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அறி
முகமான சீரிய பகுத்தறிவாளர், தலைசிறந்த நாத்திகர். இறுதிவரை அந்தக்
கொள்கையை உறுதியோடு, பின்பற்றிய அருமைப் பகுத்த றிவுப் பேராசிரியர்
பெரும்புலவர் டாக்டர் நன்னன் அவர்கள் இயற்கை எய்தினார் என்பது மிகப்பெரிய
துன்பத்திற்கும், துய ரத்திற்கும் உரிய சோக நிகழ்ச்சியாகும்.
அவர்களைப் பொறுத்தவரையில் சில மாதங்களாக
உடல்நலக் குறைவு ஏற்பட்டு படுக்கையில் இருந்தார் என்றாலும், அப் பொழுதுகூட
சிறந்த நினைவாற்றலோடும், அதேநேரத்தில், கொள்கை உணர்வோடும் இருந்தார்கள்.
மற்ற எல்லாவற்றையும்விட அவர் சொன்ன
குறிப்பு, மரண வாக்குமூலமாக இதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அவர்கள் எங்களை
அழைத்து சொன்னது பதிவாகி இருக்கிறது.
மரண வாக்குமூலம்
‘‘பெரியார் தொண்டராக நிறைவாழ்வு
வாழ்ந்திருக்கிறேன். பெரியார் பெருநெறிப் பற்றி ஒழுகுபவர் வாழ்வின் முழு
வெற் றியை ஈட்டுவர்; நான் ஒரு முழு நாத்திகன் - மனநிறைவோடு என் வாழ்வை
நிறைவு செய்துகொள்கிறேன் - இது என் மரண வாக்குமூலம். என்னுடைய இறுதிச் சடங்
கில் எந்தவிதமான வைதீகமோ அல்லது இந்தக் கொள்கைக்கு மாறானதோ நுழைந்து விடக்
கூடாது'' என்று தன்னுடைய பிள் ளைகள், பெண்கள், உற்றார் உறவினர்கள்,
அவருடைய வாழ்விணையர் அத்து ணைப் பேரையும் வைத்துக் கொண்டு சொன்னார். சற்று
நேரத்திற்கு முன்புகூட, அவருடைய வாழ்விணையர் அவர்கள் அதைத்தான் நினைவு
கூர்ந்தார்.
இறுதிவரை நன்னன் அவர்கள் சிறப்பான வாழ்வை வாழ்ந்திருக்கிறார்
அப்படிப்பட்ட ஒரு பெரு வாழ்க்கையை
வாழ்ந்தவர். 94 ஆண்டுகாலத்தில், அவர்கள் தலைசிறந்த பகுத்தறிவுவாதியாக,
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர், பேராசிரியர் இப்படி
எல்லோரிடத் திலுமே மிக நெருக்கமாக இருந்தவர்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவர்
புலவராக உருவாகிய அந்தக் காலகட் டத்திலிருந்து இறுதிவரை அவர்கள் சிறப் பான
வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள்.
ஒரு நாத்திகராக இருந்து வாழ்க்கையில்
சிக்கனமாகவும், எளிமையாகவும், பெரியாரு டைய தத்துவங்களை வாழ்க்கை நடைமுறை
யில் அப்படியே பின்பற்றப்படக் கூடியவரா கவும் இருந்து, வழிகாட்டக்
கூடியவராக அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே, அப்படிப்பட்ட அவர், கொள் கையாக
என்றைக்கும் நிறைந்திருக்கிறார். கொள்கை உள்ளம் படைத்தவர்கள், அவரு டைய
நூல்கள் மூலமாக, அவருடைய பதி வுகள் மூலமாக என்றைக்கும் நன்னன் அவர் கள்
வாழ்கிறார்! அவர் மறையவில்லை
- வாழ்க நன்னன்!
வளர்க அவர் கொண்ட கொள்கை!
நாத்திகக் கொள்கை! சுயமரியாதைக் கொள்கை!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
No comments:
Post a Comment