ஆளுங்கட்சிக்குக் கூறிய அரிய அறிவுரை
"அரசு குறித்தோ, அரசு திட்டங்கள் குறித்தோ மிகவும் வெளிப்படையாகவும் பயமின்றியும் விமர்சனம் செய்வதை அனுமதிக்காவிட்டால் ஜனநாயகம் கொடுங்கோலாட்சியாக மாறிவிடும்"
டில்லி, ஆக. 11- இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவிட்ட தாகக் கூறிய முன்னாள் குடியரசுத் துணைக் தலைவர் அமீத் அன்சாரி இது தொடர்பாக நான் மோடி மற்றும் அமைச்சர்களிடம் கேள்வி கேட்டபோது அவர் கள் கூறிய பதில் மன வேதனைக்கு ஆளாக்கியது என்றும் கடந்த மூன்று ஆண்டுகளாக இஸ்லாமி யர்கள் அச்சத்துடன் வாழ் கின்றனர் என்றும் கூறியுள் ளார்.
ஓய்வுபெற்ற குடியரசுத் துணை தலைவர் அமீத்
அன்சாரி அரசு தொலைக் காட்சியான மாநிலங்க ளவை தொலைக்காட்சியில் புதன் அன்று
நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது உண்மைதான்
கடந்த மூன்று ஆண்டு களாக (பாஜக ஆட்சிக்கு
வந்தது முதல்) இஸ்லாமி யர்கள் தொடர்ந்து தாக்கப் பட்டுக்கொண்டு வருகின்ற
னர். பா.ஜ.க. ஆட்சி அரிய ணையில் ஏறியது முதல் இஸ்லாமியர்கள் ஒரு வித அச்ச
உணர்வுடன் இருந்த னர். இந்த அச்ச உணர்வு இந்த ஆட்சியின் தொடர்ச்சி யில்
அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. நாளுக்கு நாள் சூழல் மோசமாகத் தான்
ஆகிக்கொண்டிருக்கி றது. மேலும் சமூகத்தில் மதச்சார்பின்மை மிகவும்
குறைந்துவிட்டது, மதரீதி யான உணர்வுகள் தூண் டப்பட்டு அமைதி குலைந்து
வருகிறது. சமூகத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது கண் கூடாகத் தெரிகிறது, இன் றைய
நிலையில் மதரீதியாக தேசபக்தி பார்க்கப்படுகி றது. குறிப்பிட்ட மதத்தவர் கள்
அனைவருமே தேச பக்தி இல்லாதவர்கள் என்ற ஒரு போலியை சிலர் உரு
வாக்கிவிட்டனர். தேச பக்தி என்பது அனைத்து இடங்களிலும் கேள்விக்
குள்ளாக்கவேண்டும் என் பது அவசியமில்லை.
நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக
நடந்து வரும் தாக்குதல்கள் மற் றும் சிறுபான்மையினர்கள் கொல்லப்படுவது
குறித்து மோடி மற்றும் அமைச்சர்க ளிடம் நான் பேசினேன், ஆனால் அதற்கு
அவர்கள் கூறிய பதில் என்னை மன வேதனைக்கு ஆளாக்கியுள் ளது. இந்த இடத்தில்
அவர்கள் கூறிய பதிலை, நான் வெளிப்படையாக கூறு வது ஜனநாயக மரபிற்கு
எதிரானது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த இந்த மூன் றாண்டுகளில் நாடு முழு
வதும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது வெளிப்படையான ஒன்று
என்று அமீது அன்சாரி கூறினார்.
மோடி ஆட்சிக்கு வருவ தற்கு முன்பு "சப்கே
சாத் சப்கா விகாஸ்" (அனைவ ரையும் சேர்த்து, அனைவ ருக்குமான வளர்ச்சி) என்று
கூறி ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் பதவியேற்ற மறுநாளே டில்லியில் பாஜ
கவினரும் இந்து அமைப் புகளும் வெற்றி நடை (விஜய் யாத்திரா) என்ற பெயரில்
நடத்திய பேரணியின் போது சிறுபான் மையினர் வணிக வளாகங்க ளுக்கு எதிரில்
நின்று இனி உங்களுக்கு கெட்டகாலம் வந்துவிட்டது என்று வெளிப்
படையாகவே கூறிக் கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக உள் துறை அமைச்சரிடம் கேட்ட
போது ஒரு சிலர் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார். இந்த நிலையில் குடியரசுத்
துணைத் தலைவர் பாஜக ஆட்சிக்கு வந்த நாளிலி ருந்தே சிறுபான்மையினர் மீதான
தாக்குதல் அதிகரித் துள்ளது என்று கூறியிருப் பது இந்த ஆட்சியில் சிறு
பான்மையினருக்கு பாது காப்பில்லை என்பதையே உணர்த்துகிறது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- கலைஞரின் மூத்த பிள்ளையான ‘முரசொலி'யின் பவள விழா காட்சியரங்கம் திறப்பு விழா ஓர் இனத்தின் எழுச்சி - பகுத்தறிவின் வெற்றி-கொள்கையின் மாட்சி!
- பவள விழா காணும் 'முரசொலி'யாம் முத்தமிழ் அறிஞர் "மூத்த செல்வத்துக்கு" நமது வாழ்த்துகள்!
- கதிராமங்கலம் மக்கள்மீது தடியடி, கைது கண்டிக்கத்தக்கது கைதானவர்களை உடனே விடுதலை செய்து தீர்வு காண்க
- கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கும் மாநிலங்களின் அதிகாரத்தை பறிப்பதா?
- ஜெர்மனி பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு
No comments:
Post a Comment